This Article is From Jul 22, 2020

“நான் ஒன்றும் டொனால்ட் டிரம்ப் அல்ல!” கொரோனா குறித்து மகாராஷ்டிர முதல்வர் கருத்து!!

கட்சி எம்.பி.யும் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரவுத் உடனான நேர்காணலின் போது இதனை தாக்ரே பகிர்ந்துள்ளார்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் நேர்காணல் வார இறுதியில் வெளியிடப்பட உள்ளது.

ஹைலைட்ஸ்

  • "Can't see my people suffer in front of my eyes," Uddhav Thackeray said
  • His remarks are a part of interview for Sena's mouthpiece "Saamna"
  • Trump has been facing criticism over his handling of the pandemic
Mumbai:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 12 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 3.27 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவுக்கு அளித்த பேட்டியில், “நான் டொனால்ட் டிரம்ப் அல்ல. எனது மக்கள் என் கண்களுக்கு முன்னால் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியாது.” என மகாராஷ்டிர மாநில முதல்வரான உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.50 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடி நிலையில், அமெரிக்கா ஏறத்தாழ 39 லட்சம் கொரோனோ நோயாளிகளைக் கொண்டு சர்வதேச அளவில் முதல் இடத்தில் உள்ளது. ஆனாலும் கூட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிராம்ப் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் உத்தவ் தாக்கரே கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் எச்சரிக்கையாக இருந்து வருகிறார், இரண்டாவது அலை நோய்த்தொற்றுகளுக்கு அஞ்சுகிறார்.

சிவசேனா கட்சி எம்.பி.யும் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரவுத் உடனான நேர்காணலின் போது இதனை தாக்ரே பகிர்ந்துள்ளார்.

பிரபலமான சிற்றுண்டியான "வாடா பாவ்" மும்பையின் தெருக்களில் எப்போது கிடைக்கும் என்று சஞ்சய் ரவுத் அவரிடம் கேட்டதற்கு, “முழு சூழலும் இன்னும் அறியப்படவில்லை என்றாலும், ஒரு மாநிலத்தின் தலைவர் தொற்றுநோயைக் குறைத்து மதிப்பிடுவது பொருத்தமானது அல்ல.” என பதிலளித்துள்ளார்.

தற்போதைய சூழலில் சில தளர்வுகள் வழங்கப்பட்டாலும், முழு முடக்கம் இன்னும் அமலில்தான் உள்ளது என்றும், தளர்வுகள் ஒவ்வொன்றாகதான் அளிக்க முடியும் என்றும் தாக்ரே தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், கல்வி நிலையல் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்த கேள்விக்கு விளக்கப்பமளித்த தாக்ரே, “நான் கூட தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேன், ஆனால்…” என பின்வாங்கியுள்ளார்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் நேர்காணல் இந்த வார இறுதியில் வெளியிடப்பட உள்ளது.

முன்னதாக தாக்ரேவின் மகனான ஆதித்யா தாக்ரே, தேர்வுகள் நடத்துவது சம்பந்தமாக சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவினை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநில நீர்வளத்துறை அமைச்சருமான ஜெயந்த் பாட்டீல், தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து எதிர்மறையான கருத்தினை தெரிவித்திருக்கிறார்.

அதே போல தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தொற்று பரவலைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது குறித்து முதல்வரை பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.