This Article is From Jun 11, 2020

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 94,000ஐ கடந்தது; மும்பையில் மட்டும் 52,000 பேர் பாதிப்பு!!

தற்போது ஜூன் 30 வரை நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் பரவலால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கு குறித்தும் உத்தவ் தாக்கரே சுட்டிக்காட்டினார்.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 94,000ஐ கடந்தது; மும்பையில் மட்டும் 52,000 பேர் பாதிப்பு!!

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 94,000ஐ கடந்தது; மும்பையில் மட்டும் 52,000 பேர் பாதிப்பு!!

Mumbai:

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில், 3,254 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 94,041 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல், நேற்று ஒரே நாளில் 149 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 3,438ஆக உயர்ந்துள்ளது. 

அதேநேரத்தில், 1,879 நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 44,517ஆக உள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார். தற்போது மாநிலத்தில் 46,074 பேர் பாதிப்படைந்துள்ளனர். 

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டியுள்ள நிலையில், மும்பையில் பாதிப்பு எண்ணிக்கை 52,667 ஆக உள்ளது. அதேபோல், அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 1,857 உள்ளது.

நேற்றைய தினம் உயிரிழந்த "149 பேரில், 97 பேர் மும்பையில் இருந்தும், 15 பேர், தானேவிலிருந்தும், 10 பேர் புனேவிலிருந்தும், 7 பேர் அவுரங்காபாத்தில் இருந்தும், ஜல்கான் மற்றும் நவி மும்பையில் இருந்து தலா 5 பேரும், உல்ஹாஸ் நகரிலிருந்து 3 பேரும், வசாய்-விரார் மற்றும் அகோலாவிலிருந்தும் 2 பேரும், பீட், அமராவதி மற்றும் கட்சிரோலியிலிருந்து தலா ஒருவரும்”என்று அந்த அதிகாரி கூறினார்.

தானே பிரிவு (இதில் மும்பையும் அடங்கும்) இதுவரை 70,700 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,338 பேர் உயிரிழந்துள்ளனர், 12,570 பேர், புனே பிரிவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 578 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீடிக்கும் நிலையிலும், வணிக மற்றும் பிற நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் வகையில் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

தற்போது ஜூன் 30 வரை நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் பரவலால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கு குறித்தும் உத்தவ் தாக்கரே சுட்டிக்காட்டினார். இது தொடர்பான வழிகாட்டுதல்கள் மக்கள் கண்டிப்பாக பின்பற்றப்படாவிட்டால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

.