This Article is From May 22, 2020

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 40,000ஐ கடந்தது! முழு விவரம்!!

சமீபத்தில் 1,408 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது. இதுவரை 11,729 பேர் குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 40,000ஐ கடந்தது! முழு விவரம்!!

மும்பையில் மட்டும் 25,000க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Mumbai:

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஒரு லட்சத்தினை கடந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 40 ஆயிரத்தினை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,345 பேர் புதியதாக இம்மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதன் மூலமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 41,642 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1,382 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மும்பையில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும்  இதுவரை 1,454 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 64 உயிரிழந்துள்ளனர். இதில் 41 பேர் மும்பையில் உயிரிழந்துள்ளனர். இன்று வரை கடந்த ஐந்து நாட்களாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது நாளொன்றுக்கு தலா 2,000 வீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஐந்து நாட்களில் இம்மாநிலத்தில் 10,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மே 17-ம் தேதியன்று அதிகபட்சமாக ஒரே நாளில் 2,347 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டனர். அதன்பின்னர் இன்றுதான் அதிக எண்ணிக்கையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்தில் 1,408 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது. இதுவரை 11,729 பேர் குணமடைந்துள்ளனர்.

மும்பையை பொறுத்த அளவில் 25,500 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 882 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தானே நகரத்தினை பொறுத்த அளவில் 31,851 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 993 பேர் உயிரிழந்துள்ளனர். புனே நகரத்தில் மட்டும், 4,207 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 222 பேர் உயிரிழந்துள்ளனர். புனே மாவட்டம் முழுக்க 5,371 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 264 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாசிக் மாவட்டத்தை பொறுத்த அளவில் 1,425 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 94 பேர் உயிரிழந்துள்ளனர். கோலாப்பூர் பகுதியில் 357 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். அவுரங்கபாத் பகுதியில் 1,297 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 பேர் உயிரிழந்துள்ளனர். லாதுர் பகுதியில் 178 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். அகோலா பகுதியில் 641 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 பேர் உயிரிழந்துள்ளனர். நாக்பூர் பகுதியில் 474 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

மற்ற மாநிலங்களிலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வந்த 48 பேரில் 11 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

3,19,710 பேருக்கு மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதில் 2,78,068 பேரின் மாதிரிகள் தொற்றால் பாதிக்கப்படவில்லை. 41,642 பேரின் மாதிரிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 1,949 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. 15,894 சுகாதார ஊழியர்கள் 64.89 லட்சம் மக்களை கண்காணித்து முடித்துள்ளனர். மாநிலம் முழுவதும் 4,37,304 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 26,865 பேர் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

(With inputs from PTI)

.