Read in English
This Article is From Jun 25, 2020

நாடு முழுவதும் 5 மாநிலங்கள் கோவிட்-19 மருந்துகளை பெறுகிறது!

கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு அவசரகால பயன்பாட்டிற்காக சிப்லா மற்றும் ஹெட்டெரோ தயாரித்த மருந்தினை வழங்க இந்திய ஒழுங்குமுறை மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by

இரண்டு மூன்று வாரங்களில் ஒரு லட்சம் குப்பியை உற்பத்தி செய்வதற்கான இலக்கை ஹெட்டெரோ நிர்ணயித்துள்ளது.

Highlights

  • நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 4.73 லட்சம் பேர் பாதிப்பு
  • ஹெட்டெரோவின் வைரஸ் தடுப்பு மருந்தினை சந்தைப்படுத்த ஒப்புதலை பெற்றுள்ளது
  • 100 மில்லிகிராம் குப்பியின் விலை ரூ .5,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.73 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 418 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பாளரான ஹெட்டெரோ, கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான Remdesivir-ஐ சந்தைப்படுத்த ஒப்புதலைப் பெற்றுள்ளது. நாட்டின் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டு மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு கோவிட் -19 மருந்தின் 20,000 குப்பிகளை இந்நிறுவனம் அனுப்பியுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகம் மற்றும் குஜராத்திற்கும் இந்த மருந்துகள் அனுப்பப்பட உள்ளன. இதை தவிர தெலுங்கானாவிலும் இந்த மருந்து கிடைக்கும். தற்போது இந்த மருந்தானது சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாடு முழுவதும் கோவிஃபோர்(Covifor) என்கிற பெயரில் இந்த மருந்து விற்பனைக்கு வருகின்றது. இந்நிலையில் இரண்டு மூன்று வாரங்களில் ஒரு லட்சம் குப்பியை உற்பத்தி செய்வதற்கான இலக்கை ஹெட்டெரோ நிர்ணயித்துள்ளது. மருந்தின் அடுத்த தொகுதி கொல்கத்தா, இந்தூர், போபால், லக்னோ, பாட்னா, புவனேஷ்வர், ராஞ்சி, விஜயவாடா, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கோவா ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்படும்.

Advertisement

ஹெட்டெரோவைத் தவிர, சிப்லா, அமெரிக்காவைச் சேர்ந்த கிலியட் சயின்சஸ் இன்க் போன்ற நிறுவனங்களும், வைரஸ் தடுப்பு மருந்து உற்பத்தியாளருடன் மருந்து தயாரிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் உரிம ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். கொரோனா தொற்றால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான நோயாளிக்கு குறைந்தபட்சம் ஆறு குப்பிகளைத் தேவைப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 100 மில்லிகிராம் குப்பியின் விலை ரூ .5,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஹெட்டெரோ நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் சிப்லா, தனது மருந்தின் விலை 5,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என்று கூறியுள்ளது.

கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு அவசரகால பயன்பாட்டிற்காக சிப்லா மற்றும் ஹெட்டெரோ தயாரித்த மருந்தினை வழங்க இந்திய ஒழுங்குமுறை மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கான இந்த மருந்தினை வழங்க அனுமதி கிடைத்துள்ளது.

Advertisement
Advertisement