ஏப்ரல் 30 க்குள் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மகாராஷ்டிரா முடிவெடுக்கும் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
Mumbai: தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,000ஐ கடந்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது பதிவாகியுள்ள கொரோனா தொற்று எண்ணிக்கையில் 13.8 சதவிகிதம் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இம்மாநிலத்தில் 7,628 பேர் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 47.6 சதவிகிதம் கொரோனா நோயாளிகள் மும்பையில் கண்டறியப்பட்டுள்ளனர்.
இச்சூழலில் “மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளில் 80 சதவீதம் பேர் அறிகுறியற்றவர்கள். அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்கள் மிகவும் முக்கியமானவை. மருத்துவர்கள் டயாலிசிஸ் போன்ற அத்தியாவசிய சேவைகளை தொடர வேண்டும். ” என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தற்போது தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 30 அன்று, தற்போதைய நிலவரத்திற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என அறிவிக்கப்போவதாக தாக்ரே குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் மக்கள் தங்கள் வீடுகளிலே முடங்கி இருக்க வேண்டும் என்றும், வெறு வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் கொரோன தொற்று திடீரென சீரடைந்து விடாது. நோய் எதிர்ப்பு குறித்தும் எவ்வித முன்னேற்றத் தகவலும் இல்லை. இப்படியான சூழலில் நாம் தொற்றால் பாதிக்கப்பட்டு அதிக ஆபத்துள்ள குழுக்களை மிக கவனமாக வைத்திருக்க வேண்டும். நாம் அனைவரும் முககவசங்களை பயன்படுத்த வேண்டும். கூட்டத்தினை உருவாக்கக் கூடாது. வீட்டிலே இருக்க வேண்டும். இந்த நேரங்களை உடற்பயிற்சிகளில் நீங்கள் செலவிடலாம். தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பின் மருத்துவமனைகளை அணுக வேண்டும். என தாக்ரே குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் தொடங்கி மே 3 வரை நாடு முழுவதும் முழு முடக்க நடவடிக்கை அமலில் இருக்கும் வேளையில் மத்திய அரசு சில தளர்வுகளுக்கு அனுமதியளித்திருந்தது. ஆனால், இவை தொற்று பரவல் மையங்களுக்கு(hotspot) பொருந்தாது என்றும் குறிப்பிட்டிருந்தது.
இனி வரும் காலங்களில் என்ன செய்ய வேண்டும் என இன்று மாலை தான் மக்களுக்கு அறிவிக்கப்போவதாகவும் தாக்ரே தெரிவித்துள்ளார். மேலும், இந்த மாநிலத்தின் பொறுப்பு நம்மிடமே உள்ளது என்றும், நாம் வைரஸை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்றும் தாக்ரே குறிப்பிட்டுள்ளார்.