This Article is From May 11, 2020

'கொரோனா வைரஸ் விவகாரத்தை மத்திய அரசு அரசியலாக்குகிறது' - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் கொரோனா சோதனைகள் நடத்துவதற்கு போதிய  வசதிகள் இல்லை என்றும், கொரோனா பாதித்தவர்களை கண்காணித்தல், பரவுதலை கண்காணித்தல் போன்றவற்றில் மேற்கு வங்கம் பின்னடைவாக உள்ளதென்றும் சிறப்புக்குழு விமர்சித்திருந்தது. 

'கொரோனா வைரஸ் விவகாரத்தை மத்திய அரசு அரசியலாக்குகிறது' - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

ஹைலைட்ஸ்

  • கொரோனா வைரஸ் விவகாரத்தை மத்திய அரசு அரசியலாக்குகிறது : மம்தா
  • பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் உரையாற்றினார்
  • லாக்டவுணை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து ஓரிரு நாட்களில் முக்கிய தகவல்
New Delhi:

கொரோனா விவகாரத்தை மத்திய அரசு அரசியலாக்கி வருவதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில் பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று 5-வது முறையாக காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். 

இந்த சூழலில் மம்தா பானர்ஜி மத்திய அரசை விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியுடனான அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தின்போது மம்தா பானர்ஜி, 'கொரோனாவை பாதித்திருக்கும் இந்த நேரத்தில் அரசியல் செய்வது என்பது சரியானதாக இருக்காது. யாரும் எங்களிடம் கருத்துக் கேட்கவில்லை. கூட்டாட்சி தத்துவத்தை சேதம் செய்ய வேண்டாம்' என்று கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

முதல்வர்கள் உடனான இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பொது முடக்கத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் குறித்து முக்கியமாக ஆலோசனை செய்யப்பட்டது. 

கொரோனா பிரச்னை தொடங்கிய மார்ச் மாதத்தில் இருந்து மத்திய அரசுக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையே முட்டலும், மோதலும் வெடித்தது. மத்திய அரசின் சிறப்புக்குழு மேற்கு வங்கத்தில் ஆய்வு நடத்துவதற்கு மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 

அனுமதிபெறாமல் வந்து விசாரணை நடத்துவதாக மத்தியக்குழு மீது குற்றம் சாட்டி மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதினார். 

கொரோனாவுக்கு எதிராக மாநில அரசு தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், மத்திய சிறப்புக்குழுவின் அவசியம் என்னவாக உள்ளதென்று மம்தா கேள்வி எழுப்பினார். மாநில அரசு அதிகாரிகளும், சிறப்புக்குழுவிடம் மோதல் குழுவை கடைபிடித்ததால் இந்த பிரச்னை தேசிய அளவில் பேசப்பட்டது. 

நாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் அதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு சிறப்புக்குழுக்களை அமைத்தது. இந்த விவகாரத்தில் மாநிலங்களின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்தது குறிப்பிடத்தக்கது. 

மேற்கு வங்கத்தில் கொரோனா சோதனைகள் நடத்துவதற்கு போதிய  வசதிகள் இல்லை என்றும், கொரோனா பாதித்தவர்களை கண்காணித்தல், பரவுதலை கண்காணித்தல் போன்றவற்றில் மேற்கு வங்கம் பின்னடைவாக உள்ளதென்றும் சிறப்புக்குழு விமர்சித்திருந்தது. 

மேற்கு வங்கம் உள்பட 10 மாநிலங்கள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் அறிவித்திருந்தார். 

.