This Article is From Mar 11, 2020

கொரோனா அச்சுறுத்தல்: மியான்மர் எல்லையை மூடியது மணிப்பூர்!!

மணிப்பூரின் அண்டை மாநிலமான மிசோரம் நேற்று மியான்மர் மற்றும் வங்கதேசம் உடனான எல்லையை மூடியது. வெளிநாட்டவர் கொரோனாவை மாநிலத்திற்குள் பரப்பி விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல்: மியான்மர் எல்லையை மூடியது மணிப்பூர்!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • வெளிநாட்டவர் மூலம் நோய் பரவக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது
  • பூடான் இந்தியாவுடனான எல்லையை மூடியுள்ளது
  • சிக்கிம், அருணாசல பிரதேசம், மணிப்பூர், மிசோரத்தில் எல்லைகள் மூடல்
Imphal:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மியான்மர் எல்லையை மணிப்பூர் மூடியுள்ளது. 

மணிப்பூரின் அண்டை மாநிலமான மிசோரம் நேற்று மியான்மர் மற்றும் வங்கதேசம் உடனான எல்லையை மூடியது. வெளிநாட்டவர் கொரோனாவை மாநிலத்திற்குள் பரப்பி விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று உள்துறையின் சிறப்புச் செயலர் ஞான பிரகாஷ், இந்தியா - மியான்மரின் மணிப்பூர் எல்லை மறு உத்தரவு வரும் வரையில் மூடப்பட்டிருக்கும் என்று உத்தரவிட்டிருந்தார். 

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவு அறிக்கையில், 'கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சுறுத்தல் காரணமாக மணிப்பூர் வழியே செல்லும் மியான்மர் சர்வதேச எல்லையில் நம்பர் 1, 2, மோரே மற்றும் இதர பாதைகள் மறு உத்தரவு வரும் வரையில் அடைக்கப்பட்டிருக்கும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு மணிப்பூர் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக சிக்கிம் மற்றும் அருணாசலப் பிரதேசத்தில் உள்ள சர்வதேச எல்லைகள் மூடப்பட்டன. இதேபோன்று பூடானும், வெளிநாட்டவர் உள்ளே வராத அளவுக்கு எல்லைகளை அடைத்து வைத்துள்ளது. 

சீனாவின் வுஹான் நகரை மையமாகக் கொண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் சுமார் 100-க்கும் அதிகமான நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் கொரேனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் இதனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

.