கொரோனா குணமடைந்தவர்கள் பிளாஸ்மாவை தானமாக வழங்க வேண்டும் (File)
New Delhi: கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது இரத்த பிளாஸ்மாவை தானமாக வழங்க வேண்டும் என தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர் ஊரடங்கு சமயத்தில் மதக் கூட்டத்தை நடத்தியதாக போலீசாரால் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக நேற்றைய தினம் அவர் வெளியிட்ட கடிதத்தில், அவரும், அந்த அமைப்பை சேர்ந்த மேலும் சிலரும் தனிமைப்படுத்தலில் இருந்ததாகவும், பெரும்பாலும் தனிமைப்படுத்தலில் இருந்த பெரும்பாலானோருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று முடிவு வந்த போதிலும், பெரும்பாலோனார் சிகிச்சை எடுத்ததாகவும், அனைவரும் தற்போது குணமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல், அவரும், மற்றும் சிலர் மட்டுமே இன்னும் தனிமைப்படுத்தலில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நோய்தொற்று குணமடைந்தவர்கள் அவர்களது இரத்த பிளாஸ்மாவை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ரம்ஜான் காலக்கட்டத்தில் அனைவரும் வீட்டில் இருந்தபடியே பிரார்த்தனை செய்யுமாறு தப்லீக் அமைப்பை பின்பற்றுபவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஆன்லைன் மூலம் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் அதிகளவில் வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக கடந்த மாதம் நடந்த தப்லீக் ஜமாத் கூட்டத்தையும், மற்ற நாடுகளிலிருந்து டெல்லிக்கு அதிக அளவில் பயணிப்பவர்களும் வைரஸ் பரவுவதற்கான காரணங்கள் என்று கூறினார்.
டெல்லி போலீசார் கடந்த மார்ச்.31ம் தேதி தப்லீக் ஜமாத் தலைவர் உட்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, பெரும் கூட்டங்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதனை மீறியதாக கூறப்பட்டுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)