This Article is From Apr 28, 2020

கொரோனாவால் 3 காவலர்கள் பலி: 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீட்டிலே இருக்க அறிவுறுத்தல்!

அடுத்தடுத்து 3 நாட்களுக்குள் 3 காவலர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், மும்பை தலைமை காவலர் பாரம்பீர் சிங் இந்த முடிவினை எடுத்துள்ளார்.

கொரோனாவால் 3 காவலர்கள் பலி: 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீட்டிலே இருக்க அறிவுறுத்தல்!

மும்பையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,000ஐ தாண்டியது.

ஹைலைட்ஸ்

  • மும்பையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,000ஐ தாண்டியது.
  • 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீட்டிலே இருக்க அறிவுறுத்தல்!
  • அடுத்தடுத்து 3 நாட்களுக்குள் 3 காவலர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு
Mumbai:

மும்பையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் 3 காவலர்கள் உயிரிழந்த நிலையில், 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸூக்கு எதிரான பணியில் 55 வயதுக்கு மேலான காவலர்கள் பங்கேற்கமாட்டார்கள். வைரஸ் பரவல் கட்டுக்குள் வரும் வரை அவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என மும்பை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அடுத்தடுத்து 3 நாட்களுக்குள் 3 காவலர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், மும்பை தலைமை காவலர் பாரம்பீர் சிங் இந்த முடிவினை எடுத்துள்ளார். உயிரிழந்த அனைவரும் 50 வயதுக்கும் மேற்பட்டோர் ஆவார்கள். 

55 வயதுக்கு மேற்பட்டோர் எளிதில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்ற மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனையின்ப்படி, அந்த வயதினர் அதிக ஆபத்துக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மும்பையில், 5,500க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 219ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகளவிலான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
 

.