This Article is From Jun 15, 2020

லாக்டவுனுக்கிடையில் புறநகர் ரயில் சேவையை தொடங்கும் மும்பை!

புறநகர் ரயில்கள் மும்பையின் உயிர்நாடியாகும். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காரணமாக பொது போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக போக்குவரத்து இயல்பு நிலையில் இருந்தபோது லட்சக்கணக்கான மக்கள் இந்த புறநகர் ரயில் போக்குவரத்தினை பயன்படுத்தினர்.

லாக்டவுனுக்கிடையில் புறநகர் ரயில் சேவையை தொடங்கும் மும்பை!

இந்த ரயில்கள் காலை 5:30 முதல் இரவு 11:30 வரை 15 நிமிட இடைவெளிகளில் இயக்கப்படும்

ஹைலைட்ஸ்

  • மும்பையில் சில உள்ளூர் ரயில்களை இயக்க மேற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது
  • ரயில்களில் பொது பயணிகளுக்கு அனுமதி இல்லை
  • ரயில்கள் காலை 5:30 முதல் இரவு 11:30 வரை15 நிமிட இடைவெளிகளில் இயக்கப்படும்
New Delhi/ Mumbai:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.20 லட்சத்தினை கடந்துள்ள நிலையில் தற்போது தேசிய தலைநகரான டெல்லி மற்றும் தேசிய வர்த்தக தலைநகரான மும்பையில் சில உள்ளூர் ரயில்களை இயக்க மேற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த ரயில்களில் பொது பயணிகளுக்கு அனுமதி இல்லையென்றும், மிக அவசியான பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்றும், அதே போல அவசர தேவைக்காக பயணம் மேற்கொள்ளுபவர்கள் கூட்டமாக ரயில் நிலையத்திற்கு வர வேண்டாம் என்றும் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

மாநில அரசால் அடையாளம் காணப்பட்டுள்ள அத்தியாவசிய ஊழியர்களுக்காக இன்று முதல் சில வரையறுக்கப்பட்ட வழித்தடங்களில் புறநகர் ரயில் சேவையை மேற்கு ரயில்வே தொடங்கும் என ரயில்வேதுறை டிவிட்டரில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ரயில்கள் காலை 5:30 முதல் இரவு 11:30 வரை 15 நிமிட இடைவெளிகளில் இயக்கப்படும் என்றும், பெரும்பாலும் சர்ச்ச்கேட் மற்றும் விரார் வழித்தடங்களுக்கு இடையே இயக்கப்படும். ஆனால், சில ரயில்கள் தஹானு ரோடு வரை இயக்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும்,

அத்தியாவசிய தேவைக்காக 1.25 லட்சம் பயணிகள் இந்த ரயிலில் பயணிக்க வாய்ப்புள்ளது. சீசன் பாஸ் வைத்திருந்தவர்கள், லாக்டவுன் நாட்களில் ரயில் இயக்கப்படாததால் அதற்கு இணையாக நாட்கள் வரை பாஸ் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும். பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள், மாநில அரசிடமிருந்து பெற்ற பாஸை காண்பித்த பின்னரே பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பொதுவாக 1,200 பயணிகளை ஏற்றிச் செல்லும் இந்த ரயில்கள் தற்போது சமூக இடைவெளியை கவனத்தில் கொண்டு 700 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநில அரசிடம் ஊழியர்களிடம் அலுவலக நேரத்தில் மாற்றம் செய்ய ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.

புறநகர் ரயில்கள் மும்பையின் உயிர்நாடியாகும். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காரணமாக பொது போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக போக்குவரத்து இயல்பு நிலையில் இருந்தபோது லட்சக்கணக்கான மக்கள் இந்த புறநகர் ரயில் போக்குவரத்தினை பயன்படுத்தினர்.

மாகராஷ்டிராவை பொறுத்த அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தேசிய அளவில் முதல் இடத்தில் உள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை காரணமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 70 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டனர். 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.