This Article is From Jul 27, 2020

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,000-ஐ நெருங்கியது!

இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 14.35 லட்சத்தை நெருங்கியுள்ளது. 

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,000-ஐ நெருங்கியது!

India coronavirus cases: மொத்தமாக 32,000க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

New Delhi:

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,000-ஐ நெருங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 14.35 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதேபோல், நேற்று ஒரே நாளில் 708 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 32,771 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, நாட்டில் குணமடைபவர்களின் விகிதமானது 63.92 சதவீதமாக உள்ளது. கிட்டதட்ட 9.1 லட்சத்திறகும் மேலானவர்கள் குணமடைந்துள்ளனர். 

179 நாட்களில் இந்தியாவில் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசு தரவுகள் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரத்தில் மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. 

கடந்த மே.19ம் தேதி நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை அடைந்தது. இதைத்தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக 2 வாரம் எடுத்துக்கொண்டது. தொடர்ந்து, 2 லட்சத்தை கடந்த 10 நாட்களில் ஜூன் 13ம் தேதி இந்தியாவில் கொரோனா வைரஸ் 3.08 லட்சமாக உயர்ந்தது. ஜூன்.21ம் தேதியன்று 4.1 லட்சமாக இருந்த பாதிப்பு எண்ணிக்கை, 27ம் தேதியில் 5.08 லட்சமாகவும், ஜூலை 2ம் தேதி 6.04 லட்சமாகவும், ஜூலை 7ம் தேதி 7.19 லட்சமாகவும் இருந்தது. தொடர்ந்து நான்கு நாட்களில் 8,2 லட்சமாக உயர்ந்தது. ஜூலை 14ம் தேதி 9.06 லட்சமாக உயர்ந்தது. 

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களாக மகாராஷ்டிரா (9,431), ஆந்திரா (7,627), தமிழ்நாடு (6,986), கர்நாடகா (5,199), உத்தரபிரதேசம் (3,246) உள்ளன.

இந்த காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ள ஐந்து மாநிலங்கள்: மகாராஷ்டிரா (267), தமிழ்நாடு (85), கர்நாடகா (82), ஆந்திரா (56) மற்றும் மேற்கு வங்கம் (40) ஆகும்.

சுமார் 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு - இதுவரை 1.68 கோடி மாதிரிகளை சோதித்துள்ளது. நேற்றைய தினம் அதிக எண்ணிக்கையிலான மாதிரிகளாக 5,15,472 வரை சோதனை செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி இன்று நொய்டா, மும்பை மற்றும் கொல்கத்தாவில் புதிய கொரோனா சோதனை வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளார். இது சோதனை திறனை அதிகரிக்கும் மற்றும் நாட்டில் முன்கூட்டியே பாதிப்பை கண்டறிதல் மற்றும் சிகிச்சையை வலுப்படுத்த உதவும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. காணொளி காட்சி மூலம் நடக்கும் இந்த வெளியீட்டு நிகழ்வில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர்கள் - உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

தொற்றுநோயால் நாட்டின் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள மகாராஷ்டிரா இதுவரை 3.75 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளை பதிவு செய்துள்ளது. 

டெல்லியில் கொரோனா மீட்பு விகிதமனாது கிட்டத்தட்ட 88 சதவீதத்தை எட்டியுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, பாதிப்பு எண்ணிக்கை "சீராக" குறைந்து வருவதாகக் கூறினார். தேசிய தலைநகரம் இதுவரை 1.3 லட்சம் வழக்குகளை பதிவு செய்து நாட்டில் பாதிப்பு அதிகமுள்ள மூன்றாவது மாநிலமாக உள்ளது. 

.