Read in English
This Article is From May 20, 2020

'சீனா, இத்தாலியை விட இந்திய வைரஸின் தாக்குதல் அபாயகரமாக உள்ளது' - நேபாள பிரதமர்

இந்திய எல்லைப் பகுதியில் லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலபானி ஆகிய பகுதிகள் உள்ளன. இவை நேபாளத்திற்கு சொந்தமானது என்று கூறி அந்நாடு புதிய வரை படத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்திருக்கிறது. 

Advertisement
இந்தியா ,

இந்தியா - நேபாளம் இடையே 1,800 கிலோ மீட்டர் நீளத்திற்கு நில எல்லை அமைந்துள்ளது. 

New Delhi/Kathmandu:

சீனா, இத்தாலியை விட இந்திய வைரஸின் தாக்குதல் அபாயகரமாக இருப்பதாக நேபாள பிரதமர் ஒலி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்த வருகிறது. 

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பிரதமர் ஒலி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது-

சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து வருபவர்களால் நேபாளத்தில் கொரோனா பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. இதற்கு உள்ளூரை சேர்ந்த பிரமுகர்கள், சில அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பொறுப்பாவார்கள். முறையான பரிசோதனை ஏதும் மேற்கொள்ளாமல் இந்தியாவிலிருந்து சிலர் நேபாளத்திற்கு வருவதால்தான் இந்த பிரச்னை ஏற்படுகிறது.

இந்தியாவின் வழியே பரவும் வைரஸ் சீனா மற்றும் இத்தாலிய வைரஸை விட அபாயகரமாக உள்ளது. இந்திய வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். நேபாளம் கலபானி - லிம்பியாதுரா - லிபுலேக் பகுதியை திரும்பப் பெறும்.

Advertisement

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்தியா புதிய சாலை அமைப்பதுதொடர்பாக இந்தியாவுக்கும் - நேபாளத்திற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இந்திய வைரஸ் என்ற வார்த்தையை நேபாள பிரதமர் கூறியுள்ளார். 

இந்திய எல்லைப் பகுதியில் லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலபானி ஆகிய பகுதிகள் உள்ளன. இவை நேபாளத்திற்கு சொந்தமானது என்று கூறி அந்நாடு புதிய வரை படத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்திருக்கிறது. 

Advertisement

இந்தியா - நேபாளம் இடையே 1,800 கிலோ மீட்டர் நீளத்திற்கு நில எல்லை அமைந்துள்ளது. 

கடந்த 8-ம்தேதி பாதுகாப்பு அமைச்சர் உத்தரகாண்டில் இருந்து லிபுலேக்கை இணைக்கும் சாலையை திறந்து வைத்தார். இதற்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

Advertisement