This Article is From Mar 18, 2020

அமெரிக்காவில் 22 லட்சம் மற்றும், இங்கிலாந்தில் 5 லட்சம் கொரோனா இறப்புகளைக் கணித்துள்ள ஆய்வு

எந்தவொரு தடுப்பு நடவடிக்கையும் இல்லாமல் இருப்பின், பிரிட்டனில் அரை மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளையும், அமெரிக்காவில் 2.2 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளையும் COVID-19 தொற்றுநோய் ஏற்படுத்தக்கூடும் என்று பேராசிரியர் நீல் பெர்குசன் கூறியுள்ளார்

அமெரிக்காவில் 22 லட்சம் மற்றும், இங்கிலாந்தில் 5 லட்சம் கொரோனா  இறப்புகளைக் கணித்துள்ள ஆய்வு

லண்டன் இம்பீரியல் கல்லூரியில் கணித உயிரியல் பேராசிரியரான நீல் பெர்குசன் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கினார்

ஹைலைட்ஸ்

  • Data was gathered from Italy for the modelling study
  • Britian has advised those over 70 with health problems to isolate
  • Britiain has been criticised for not acting fast enough to contain virus
London:

COVID-19 வைரஸை தடுப்பதற்கான இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஊக்குவிக்க உதவிய ஒரு முக்கியமான திட்ட ஆய்வு இது. ஆயிரக்கணக்கான இறப்புகள் மற்றும் கடுமையான நோய்வாய்ப்பட்ட நோயாளிகளால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சுகாதார சேவையின் மோசமான படத்தை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலுக்கு எதிரான பிரிட்டனின் அணுகுமுறையைக் கடுமையாக்கிய பிரதமர் போரிஸ் ஜான்சன், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தில் உள்ளவர்களாகிய நாம் சமூக வாழ்க்கையைத் தற்காலிகமாக மூடிவிட்டு, 70 வயதிற்கு மேற்பட்டவர்களையும் அடிப்படை சுகாதார பிரச்சினைகள் உள்ளவர்களையும் தனிமைப்படுத்த அறிவுறுத்தினார்.

லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் கணித உயிரியலின் பேராசிரியர் நீல் பெர்குசன் தலைமையிலான குழு, இந்த ஆய்வுக்கு இத்தாலியிலிருந்து சேகரிக்கப்பட்ட புதிய தரவுகளைப் பயன்படுத்தியது, அங்கு சமீபத்திய வாரங்களில் தொற்றுநோய் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1918-ம் ஆண்டின் பேரழிவு தரும் காய்ச்சல் நோயுடன் COVID-19 தொற்றுநோயின் தாக்கத்தை ஒப்பிடுகையில், எந்தவொரு தடுப்பு நடவடிக்கையும் இல்லாமல் இருப்பின், பிரிட்டனில் அரை மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளையும், அமெரிக்காவில் 2.2 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளையும் COVID-19 தொற்றுநோய் ஏற்படுத்தக்கூடும் என்று பேராசிரியர் நீல் பெர்குசன் கூறியுள்ளார்.

தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முந்தைய திட்டத்தின் - இது சந்தேகத்திற்கிடமான நபர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தியது, ஆனால் பரந்த சமுதாயத்தின் மீதான கட்டுப்பாடுகளை உள்ளடக்கியிருக்கவில்லை - விளைவாக 250,000 பேர் இறந்துபோகக்கூடும் என்று ஆய்வு குறிப்பிடுகிறது.

கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நடவடிக்கைகள் மூலம் - சமூகத்திலிருந்து தனிமையாதல் மற்றும் கிளப்புகள், பப்கள், திரையரங்குகளைத் தவிர்ப்பதற்கான ஆலோசனைகள் உட்பட - தொற்றுநோயின் விளைவு மற்றும் பாதிப்புகளை உணர்ந்துகொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

"இது ஒரு சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக எங்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும்" என்று பெர்குசனுடன் இணைந்து பணியாற்றிய இம்பீரியல் நிறுவனத்தில் தொற்றுநோயியல் பேராசிரியர் அஸ்ரா கானி குறிப்பிட்டிருக்கிறார்.

லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியின் உலகளாவிய சுகாதார தொற்றுநோயியல் நிபுணர் டிம் கோல்போர்ன், ஆய்வில் உள்ள கணிப்புகள் "கடினமான காலங்களை" அடையாளம் காட்டுவதாகக் கூறினார்.

இந்த ஆய்வு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சுகாதார மேம்பாட்டிற்கான நிலைப்பாட்டை மாற்ற உதவியது என்று முடிவோடு தொடர்புடையவர்கள் தெரிவிக்கின்றனர். "நிபுணர்களின் ஆலோசனையின் பேரில்" தனது திட்டங்களைத் துரிதப்படுத்தியதாகவும், புதிய நடவடிக்கைகள் எப்போதும் "அரசாங்கத்தின் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக" இருந்ததாகவும் அரசாங்கம் கூறுகிறது.

"நாங்கள் தொடர்ந்து அறிவியலைப் பின்பற்றி நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் செயல்படுகிறோம், அதாவது நாங்கள் முதலில் திட்டமிட்டதை விட இந்த கணிசமான நடவடிக்கைகளைச் சற்று வேகமாக மேற்கொண்டு வருகிறோம்" என்று அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது.

COVID-19 ன் பரவலைக் கட்டுப்படுத்த பிரிட்டன் வேகமாகவோ அல்லது பலமாகவோ செயல்படவில்லை என்று கவலை கொண்ட சில பொதுச் சுகாதார நிபுணர்களால் ஜான்சனின் அரசாங்கம் விமர்சிக்கப்பட்டது, அதே நேரத்தில் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற பிற நாடுகள் மிகக் கடுமையான பொதுவெளியைத் தடுக்கும் நடவடிக்கைகளையும் தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.

ஆனால், லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் இயக்குநரும், வைரஸ்கள் மற்றும் தொற்று நோய் தொற்றுநோய்களின் நிபுணருமான பீட்டர் பியோட், பிரிட்டனின் அணுகுமுறை "தற்போதைய பொதுச் சுகாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கும், பல மற்றும் சிக்கலான சமூக தாக்கங்களுக்கும் இடையில் ஒரு நல்ல சமநிலையை ஏற்படுத்துகிறது. என்றார்."

"இந்த முன் அனுபவம் இல்லாத தொற்றுநோயால் சில தகவல்கள் நமக்கு இன்னும் குறைவாகவே தெரியும், அதைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து அணுகுமுறைகளுக்கும் முற்றிலும் பொருந்தாது" என்று பியோட் கூறினார். "எப்போதும் மாறிவரும் தொற்றுநோய்க்கான சவாலை மாற்றியமைக்க, விரைவாக வளர்ந்து வரும் அறிவியல் புரிதலுக்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும்."

.