கால்களால் இயக்கப்படும் லிப்ட் வசதி கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Chennai: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில், ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பொது போக்குவரத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு புதிய முயற்சியினை செயல்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையில் உள்ள லிப்டில் பட்டண்களை கால்களில் இயக்கும் முறையில் வடிவமைத்துள்ளது. இந்த வகையில் மாற்றியமைக்கப்பட்ட முதல் ரயில் நிலையில் இதுதான்.
தற்போது கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் அமலாக்கப்பட்டுள்ள இந்த நடைமுறையானது விரைவில் இதர மெட்ரோ ரயில் நிலையத்திலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது சென்னை மெட்ரோ ரயில் இயக்குநரகம்.
இது மட்டுமல்லாது, தொற்று பரவல் குறித்த எச்சரிக்கை ஸ்டிக்கர்கரையும், இருக்கைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற அடையாளங்களையும் குறிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போது ஊரடங்கு காரணமாக 25 சதவிகித ஊழியர்களை மட்டும் வைத்து பராமரிப்பு பணிகளை மெட்ரோ மேற்கொண்டு வருகின்றது.
தமிழகத்தில் 874 பேர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 618 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் அதிக அளவிலான மக்கள் அடர்த்தி இருப்பதே தொற்றுக்கு காரணமாக கருதப்படுகிறது.
"சென்னையின் அதிக மக்கள் தொகை அடர்த்தியும், நெரிசலான வீடுகளும் வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. இதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எல்லாவற்றையும் செய்து வருகிறது" என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சமீபத்தில் கூறியுள்ளார்.