நாளை முதற்கொண்டு இந்தமாஸ்க்குகள் பொதுமக்கள் மத்தியில் விநியோகம் செய்யப்படுகின்றன.
Lucknow: கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் விதமாக உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு ஒரு லட்சம் மாஸ்க்குகளை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அனுப்பி வைத்ததாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் ஊடக தொடர்பாளர் லாலன் குமார், நாளை முதற்கொண்டு இந்தமாஸ்க்குகள் பொதுமக்கள் மத்தியில் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
மாஸ்க்குகளை தவிர்த்து, உத்தரப்பிரதேசத்தில் 47 லட்சம்பேருக்கு காங்கிரஸ் சார்பாக உணவு மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் கட்சியின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,342 ஆக உயர்ந்திருக்கிறது. 1,886 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தம் 16,539 பேர் சிகிச்சை குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 37,916 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)