உணவு மற்று தண்ணீருக்காக நோயாளிகள் போராட்டம் நடத்தினர்
Lucknow: உத்திர பிரதேச மாநிலத்தின் பிரயாகராஜ் மாவட்டத்தில் கௌதபானி பகுதியில் உள்ள ஒரு முதல் நிலை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் போதிய உணவு மற்றும் குடிநீர் இல்லையென மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றது.
மூன்று நிமிட காணொளியில், கொரோனா நோயாளிகள் தாங்கள் விலங்குகளை நடத்தப்படுவதாக குற்றம் சாட்டியிருக்கின்றனர். ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக தண்ணீர் பிரச்னையை நீடித்ததையடுத்து நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
நோயாளிகள் பெருமளவு மருத்துவமனைகளிலிருந்து வெளியேறுகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் தங்களை விலங்குகளாக மாற்றிவிட்டதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். தங்களுக்கான தண்ணீர் தேவையை ஆவேசமாக கேள்வியெழுப்புகின்றனர். காணொளியில் நோயாளிகளும் மருத்துவமனை பெயர் பலகையையும் காண முடிகின்றது.
“நீங்கள் சரியான உணவினை பெறுகிறீர்களா?“ என படமெடுக்கும் நபர் கேள்வியெழுப்புகிறார்.
நோயாளிகள் ஒரே குரலாக “இல்லை“ என பதிலளிக்கின்றனர். கூட்டத்திலிருந்த முதியவர் ஒருவர், சரியாக சமைக்கப்படாத உணவு வழங்கப்படுவதாக கூறியுள்ளார். மருத்துவமனைகளில் நோயாளிகளை சரியாக கவனித்துக்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் பணம் பெறுவதையும் இந்த காணொளி குறிப்பிட்டுள்ளது.
“நிர்வாகத்திடம் பணம் இல்லையெனில் எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். இதே நிலை நீடித்தால் நாங்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேற வேண்டிய நிலை வரும்“ என இரு நோயாளிகள் குறிப்பிடுகின்றனர்.
''குடிநீர் பிரச்னை இரண்டு மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது. மின்சார தடை காரணமாக நீர் வழங்கல் தாமதமாகியது. பின்னர் எலக்ட்ரீஷியனை கொண்டு பிரச்னை முழுவதும் தீர்க்கப்பட்டது. தண்ணீர் தொட்டிகளில் எப்போதும் தண்ணீர் இருந்துகொண்டு இருக்கின்றது. ஆனால், நோயாளிகள் குளிப்பதற்கு புதிய நீரை கோருகின்றனர்.'' என பிரயாகராஜின் தலைமை மருத்துவ அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் இதுபோன்று கொரோனா தொற்று நோயாளிகளுக்கான மருத்துவமனைகள் மீது தொடர் புகார்கள் வந்திருக்கின்றன. முன்னதாக எட்டாவா மற்றும் ஆக்ரா மாவட்ட மருத்துவமனைகளிலிருந்தும் இது போன்ற பிரச்னை முன்னெழுந்தது.
அதேபோல முதல் மற்றும் இரண்டாம் நிலை கொரோனா அரசு மருத்துவமனைகளில் மொபைல் போன்கள் பயன்பாட்டிற்கு மாநில மருத்துவக் கல்வித்துறை தடை விதித்திருந்தது. பரவலான எதிர்ப்பிற்கு பின்னர் இந்த தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.