This Article is From Mar 16, 2020

இந்தியாவில் கொரோனா - டெல்லியில் குணமடைந்து வீடு திரும்பிய முதல் நபர்

"யாரும் பயப்படத் தேவையில்லை, இது சாதாரண காய்ச்சல் போன்றது தான என்று கூறினார்.

"நான் பிப்ரவரி 25ம் தேதி அன்று ஐரோப்பாவிலிருந்து நாடு திரும்பினேன், மறுநாள் எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது

ஹைலைட்ஸ்

  • கொரோனா இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியபோது நான் சற்று கலங்கிப்போனேன்
  • இதுவும் சாதாரண காய்ச்சல் சளியை போன்ற, நிச்சயம் குணப்படுத்தக்கூடிய நோய்
  • அது வழக்கமான சளி மற்றும் இருமலை விட சற்று வித்தியாசமாகவே இருந்தது
New Delhi:

கொரோனா வைரஸ் தொற்றைக் குணப்படுத்துவது பற்றிப் பயப்பட ஒன்றுமில்லை, பெரும்பாலான ஆரோக்கியமான நபர்களுக்கு இந்த நோய்ப் பாதிப்புக்காக வழங்கப்படும் சிகிச்சை மிகவும் மென்மையானது, இந்நிலையில் டெல்லியில் முதல் முதலாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 45 வயதான ஆண் ஒருவர் தற்போது பூரண குணமடைந்துள்ளார்.

இதுகுறித்து அவர்  NDTVயுடன் பேசியபோது, கடந்த இரண்டு வாரங்களாக அவர் சிகிச்சை பெற்று வந்த டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் உள்ள வசதிகளைப் பாராட்டினார், "யாரும் பயப்படத் தேவையில்லை, இது சாதாரண காய்ச்சல் போன்றது தான என்று கூறினார். நமது நாட்டில் சுகாதார அமைப்பு நன்றாக இருக்கிறது, நீங்கப் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களை தனிமைப்படுத்தி வைப்பார்கள் ஆனால் அது தனிமைப்படுத்தப்பட்ட சூரிய ஒளி இல்லாத இரண்டு-இரண்டு-செல் போன்றது அல்ல." என்று கூறினார்.

தனது அனுபவத்தை விவரித்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்ப அனுமதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளில் ஒருவரான என்னை, மேலும் 14 நாட்கள் வீட்டில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் "நான் பிப்ரவரி 25ம் தேதி அன்று ஐரோப்பாவிலிருந்து நாடு திரும்பினேன், மறுநாள் எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டது, இது தொண்டையில் ஏற்பட்ட தொற்றாக இருக்கலாம் என்று எண்ணி மருத்துவரிடம் சென்றேன். அவர் எனக்கு மூன்று நாட்கள் மருந்து கொடுத்தார், அதன் பிறகு நான் 28ம் தேதி குணமடைந்தேன், ஆனால் மீண்டும் எனக்கு 29ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக நான் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்குச் சென்றேன். அங்குக் கடந்த மார்ச் 1ம் தேதி எனக்கு கொரோனாவிற்கான சோதனை நடத்தப்பட்டது என்று கூறினார்.

ஆரம்பத்தில் எனக்கு கொரோனா இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியபோது நான் சற்று கலங்கிப்போனேன், ஆனால் மறுநாள் நான் இடமாற்றம் செய்யப்பட்டு சஃப்தர்ஜங்கில் இருந்தபோது மருத்துவர்கள் குழு என்னைப் பார்க்க வந்தனர். அவர் என்னிடம் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள், மேலும் இதுவும் சாதாரண காய்ச்சல் சளியைப் போன்ற, நிச்சயம் குணப்படுத்தக்கூடிய நோய் தான் என்று கூறினார். மேலும் வழக்கமான சளி மற்றும் இருமலை விட இந்த வைரஸ் குணமாக இன்னும் சிறிது நேரம் எடுக்கும்'' என்று அவர் கூறினார்.

தனது அனுபவத்தைப் பற்றி மேலும் பேசிய அவர், "நான் ஒரு மருத்துவர் அல்ல, ஆனால் அது வழக்கமான சளி மற்றும் இருமலை விடச் சற்று வித்தியாசமாகவே இருந்தது. இதற்காக இந்திய அரசு உருவாக்கிய சஃப்தர்ஜங்கில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் நான் இருந்தேன். வசதிகள் மிகவும் நன்றாக இருந்தன, இது நான் பார்த்த மிகச் சிறந்த ஒன்றாகும்.

எனக்குக் குளியலறையுடன் கூடிய ஒரு தனி அறை இருந்தது, "என்று அவர் கூறினார். இந்திய நாட்டில் நாவல் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை 110 ஆக உயர்ந்துள்ளது, கேரளாவைத் தொடர்ந்து மகாராஷ்டிரா அதிக எண்ணிக்கையிலான பாதிப்பினை கொண்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியில் சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கிய இந்த நோய்க்கு உலகம் முழுவதும் சுமார் 6000 பேர் இறந்துள்ளனர். 

.