Coronavirus News: இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கொரோனா வைரஸ் 2வது கட்டத்தில் இருக்கும்போது அது சமூக பரிமாற்றமாக இருக்காது என்கிறது.
ஹைலைட்ஸ்
- இந்திய அளவில் கொரோனாவால் 160-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
- தமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
- இதுவரை இந்தியாவில் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
New Delhi: Coronavirus News: கொரோனா வைரஸ் காரணமாக 100 நாடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ், அதன் இரண்டாவது கட்டத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கொரோனா வைரஸ் 2வது கட்டத்தில் இருக்கும்போது அது சமூக பரிமாற்றமாக இருக்காது என்கிறது.
அதற்கு அர்த்தம்?
“நாம் இரண்டாம் கட்டத்தில் இருக்கிறோம் என்பது உறுதி. தற்போதைக்கு நாம் 3வது கட்டத்தில் இல்லை. 3வது கட்டம் என்பது, சமூக பரிமாற்றமாக கொரோனா உருவெடுக்கும். அது வரக்கூடாது என நினைக்கிறோம்,” என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின், இயக்குநர், பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், “எந்த அளவுக்கு நம் சர்வதேச எல்லைகளை மூடுகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் இந்த 3வது கட்டம் நிர்ணயிக்கப்படும். அந்த விஷயத்தில் அரசு, நன்றாகவே செயல்பட்டுள்ளது. அதே நேரத்தில் 3வது கட்டம் வரவே வராது என்று சொல்ல முடியாது,” என்கிறார்.
கொரோனா வைரஸின் 4 கட்டங்கள் குறித்த விளக்கம்:
கட்டம் 1: பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு மட்டும் கொரோனா இருக்கும்.
கட்டம் 2: பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டும் இந்த கட்டத்தில் கொரோனா பரவும்.
இந்த கட்டத்திலும் குறைவான மக்களே பாதிக்கப்படுவார்கள். இந்த கட்டத்தில் வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதைச் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும்.
கட்டம் 3: இந்த கட்டத்தில்தான் சமூக பரிமாற்றமாக உருவெடுக்கும் கொரோனா. பெரும்பான்மையாகப் பகுதிகளில் இதனால் பாதிப்பு ஏற்படும். வெளிநாட்டிலிருந்து வந்தவரோ அல்லது பாதிக்கப்பட்ட நபரோ நேரடியாகத் தொடர்பில் இல்லாதபோதும், கொரோனா தொற்று பரவுவது இந்த கட்டத்தில்தான் நடக்கும்.
இந்த கட்டத்தில் வைரஸ் எங்கிருந்து வந்தது என்பது தெரியாது. இத்தாலியும் ஸ்பெயினும் இந்த கட்டத்தில்தான் உள்ளன.
கட்டம் 4: கட்டுக்கடங்காமல் நோய் பரவுவது இந்த கட்டத்தில்தான் நடக்கும். சீனாவில் இதுதான் நடந்தது.