This Article is From Jun 09, 2020

‘டெல்லியில் பாதிப்பேருக்கு கொரோனா எப்படி வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை’ :அரசு தகவல்

தற்போது வரை டெல்லியில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெய்ன் கூறியுள்ளார்.

டெல்லியில் கொரோனா பாதிப்பு சமூக பரவல் நிலையை அடைந்து விட்டதா என் கேள்விகள் எழுந்துள்ளன.

New Delhi:

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு சமூக பரவல் நிலைக்கு செல்லவில்லை என்று கூறியுள்ள அரசு, கொரோனா பாதித்தவர்களில் பாதிப்பேருக்கு எப்படி ஏற்பட்டது என்றே கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளது.

இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அளித்த பேட்டியில், ‘டெல்லியில் சமூக பரவல் ஏற்படவில்லை. இதனை மத்திய சிறப்பு அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்' என்று கூறியுள்ளார். முன்னதாக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளும், டெல்லி அமைச்சர்களும் கொரோனா தடுப்பு தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பல பேருக்கு தாங்கள் எப்படி பாதிக்கப்பட்டோம் என்றே தெரியவில்லை. டெல்லியில் கொரோனா பாதித்த பாதிப்பேருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது என்று கண்டுபிடிக்க முடியவில்லை' என்று கூறியுள்ளார்.

சமூக பரவல் என்பது, கொரோனா பாதிப்பின் மூன்றாவது நிலை என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைக்கு வந்துவிட்டால் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது மிக கடினமாக மாறி விடும்.

டெல்லியில் கொரோனா பரவல் சமூக பரவல் நிலையை அடைந்து விட்டதா இல்லையா என்பதை மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் என்று டெல்லி அரசு கூறியிருக்கிறது.

தற்போது வரை டெல்லியில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெய்ன் கூறியுள்ளார்.

.