This Article is From Apr 28, 2020

கடந்த ஒரு வாரமாக 80 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை: ஹர்ஷ்வர்தன்

மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பயோடெக்னாலஜி துறையின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கடந்த ஒரு வாரமாக 80 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை: ஹர்ஷ்வர்தன்

கடந்த ஒரு வாரமாக 80 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை: ஹர்ஷ்வர்தன்

ஹைலைட்ஸ்

  • கடந்த ஒரு வாரமாக 80 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
  • கடந்த 14 நாட்களில், 47 மாவட்டங்களில் எந்தவொரு கொரோனா பாதிப்பும் இல்லை
  • கடந்த 24 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் யாருக்கும் பாதிப்பு இல்லை
New Delhi:

கடந்த 7 நாட்களாக 80 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பயோடெக்னாலஜி துறையின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 7 நாட்களாக 80 மாவட்டங்களில், புதிதாக எந்தவொரு கொரோனா பாதிப்பும் ஏற்படவில்லை. அதேபோல், கடந்த 14 நாட்களில், 47 மாவட்டங்களில் எந்தவொரு கொரோனா பாதிப்பும் ஏற்படவில்லை.

கடந்த 21 நாட்களாக, 39 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை. இதேபோல், 17 மாவட்டங்களில் கடதந 28 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை என்ற தகவல்களை அவர் கூறினார். 

மேலும், 300 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் இல்லாத மாவட்டங்களாகவும், குறிப்பிடத்தக்க அளவு கொரோனா பாதிப்பு உள்ள `129 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.  

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. 

இந்தியாவில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 29,435ஆக அதிகரித்துள்ளது. இதில், 6869 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், 21,632 பேர் தொடர்ந்து, பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 934 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

.