10 வயதுக்கு உட்பட்டோரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஹைலைட்ஸ்
- கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது
- வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால்தான் இந்தியாவில் கொரோனா பரவுகிறது
- ஏப்ரல் முதல்வாரம் வரையில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்
New Delhi: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் சர்வதேச விமானங்கள் தரையிறங்குவதற்கு மார்ச் 22-ம்தேதி முதல் அனுமதி கிடையது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
65 அல்லது அதற்கு அதிகமான வயதுடைய மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகளை தவிர்த்து மற்றவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேபோன்று 10 வயதுக்கு உட்பட்டோரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாணவர்கள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகளை தவிர்த்து மற்றவர்களுக்குள்ள சலுகைகளை தற்காலிகமாக ரத்து செய்யும்படி மத்திய அரசு ரயில்வே மற்றும் விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலங்களிலும் முடிந்த அளவுக்கு ஊழியர்கள் பணியை வீட்டிலிருந்தே செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 169-ஆக உயர்ந்திருக்கிறது. புதியதாக 18 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழப்பு 3-ஆக இருந்த நிலையில், பஞ்சாபில் 70 வயது முதியவர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. இந்த முதியவர் ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.
தடுப்பு நடவடிக்கையாக சுமார் பாதிக்கும் அதிகமான ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்யும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனாவில் உலகளவில் உயிரிழப்பு 9 ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.