முதன் முதலில் மார்ச்.31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது டெல்லியில் தான். (File)
ஹைலைட்ஸ்
- டெல்லியில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால்
- முதன் முதலில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது டெல்லியில் தான்
- உங்களின் ஒத்துழைப்பு தேவை - கெஜ்ரிவால்
New Delhi: கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மொத்தம் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் 30க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 5 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்வீட்டரில் கூறியதாவது, டெல்லியில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. ஏனினும், அதில் சந்தோஷப்படுவதற்கு ஒன்றுமில்லை. நிலைமை கை மீறி சென்று விடாமல் தடுப்பதே நம் முன்னால் இருக்கும் பெரிய சவால், அதற்கு உங்களின் ஒத்துழைப்பு தேவை என்று அவர் கூறியுள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 14,000க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், மார்ச் 31ம் தேதி டெல்லியிலே முதன் முதலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அங்கு அனைத்து வணிக வளாகங்களும், கடைகளும், அலுவலகங்களும், தொழிற்சாலைகளும், வாரச் சந்தைகளும் முடக்கப்பட்டன. அத்தியவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
முன்னதாக, நேற்றைய தினம் பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பதிவில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்து இருந்தார். பலரும் ஊரடங்கு உத்தரவுகளைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. மத்திய அரசு பிறப்பிக்கும் உத்தரவுகள் முறைப்படி பின்பற்றப்படுகிறதா என்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்,” என மோடி தெரிவித்திருந்தார்.