This Article is From Jun 27, 2020

ஓய்வு பெறுவதற்கு 4 நாட்கள் முன்பு கொரோனாவால் உயிரிழந்த தலைமை செவிலியர்!

. இம்மாத இறுதியுடன் பணி ஓய்வு பெற இருந்த அந்த செவிலியர் மோசமான நிலையில், காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

ஓய்வு பெறுவதற்கு 4 நாட்கள் முன்பு கொரோனாவால் உயிரிழந்த தலைமை செவிலியர்!

. இம்மாத இறுதியுடன் பணி ஓய்வு பெற இருந்த அந்த செவிலியர் மோசமான நிலையில், காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  (Representational)

Hyderabad:

ஐதரபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இம்மாத இறுதியுடன் பணி ஓய்வு பெற இருந்த அந்த செவிலியர் மோசமான நிலையில், காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதுதொடர்பாக காந்தி மருத்துவமனையில் மருத்துவர் பிரபாகர் ரெட்டி கூறியதாவது, அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இங்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சர்க்கரை வியாதியும் இருந்தது. இரண்டு நாட்கள் முன்னதாக அவர் வென்டிலேடரில் வைக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். 

செவிலியர் மரணத்திற்கு தெலுங்கான ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் முதன்முறையாக தலைமை செவிலியர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். 

மருத்துவ விடுப்பில் இருந்த அந்த செவிலியர், ஊழியர்கள் பற்றாக்குறையால் மீண்டும் பணிக்கு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவருக்கு காய்ச்சல் வந்துள்ளது. அப்போது சோதனை செய்ததில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்ததே, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது. 

காந்தி மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. 

தெலுங்கானா மாநிலத்தில் நேற்று மட்டும் புதிதாக 985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 12,349 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் தற்போது 7,436 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

நேற்றைய தினம் மட்டும், 78 நோயாளிகள் குணமடைந்ததை தொடர்ந்து, 4,766 பேர் மொத்தமாக அங்கு குணமடைந்துள்ளனர். இதுவரை 237 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். 

.