This Article is From May 25, 2020

பெல்ட்டால் அடிப்பேன்: அதிகாரிகளை மிரட்டிய மத்திய அமைச்சர்!

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள பல்ராம்பூர் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்தை மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் இணையமைச்சர் ரேணுகா சிங், ஆய்வு செய்தார்.

பெல்ட்டால் அடிப்பேன்: அதிகாரிகளை மிரட்டிய மத்திய அமைச்சர்!

ஹைலைட்ஸ்

  • Renuka Singh is the Minister of State for Tribal Affairs
  • She made the remark at a coronavirus quarantine centre in Chhattisgarh
  • She visited the centre after a video of poor facilities surfaced
Raipur:

அறைக்குள் அழைத்துச் சென்று பெல்ட்டாள் அடிப்பது எப்படி என்று எனக்கு தெரியும் என மத்திய அமைச்சர் அதிகாரிகளை மிரட்டுவது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் மத்திய அமைச்சர் ரேணுகா சிங் அதிகாரிகளை சர்ச்சைக்குரிய வகையில் மிரட்டும் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள பல்ராம்பூர் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்தை மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் இணையமைச்சர் ரேணுகா சிங், ஆய்வு செய்தார்.

அப்போது எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், எங்களது அரசு ஆட்சியில் இல்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். நாங்கள் 15 வருடங்கள் ஆண்டுள்ளோம். கொரோனா வைரஸை சமாளிக்க போதுமான பணம் அரசிடம் உள்ளது. மக்களுக்கு தேவையான பணம் கிடைப்பதை நான் உறுதி செய்வேன்.

காவி உடை அணிந்த பாஜகவினர் பலவீனமானவர்கள் என்று நினைக்காதீர்கள் என அங்கிருக்கும் மாநில அரசு அதிகாரிகளை அவர் மிரட்டுகிறார். அறையில் அடைத்து வைத்து பெல்ட்டால் அடிப்பது எப்படி என்பது எனக்கு தெரியும் என்று அவர் கூறுகிறார். 

பல்ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த திலீப் குப்தா என்பவர் கொரோனா தனிமைப்படுத்தல் மையத்தில் போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என்பதை தனது போனில் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து, அந்த வீடியோவை வெளியிட்டதற்காக தலைமை நிர்வாக அதிகாரியாம், மாவட்ட பஞ்சாயத்து அலுவலரும் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக தன்னை கடுமையாக தாக்கியதாக புகார் தெரிவித்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர் திலீப் குப்தாவை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார். டெல்லியில் இருந்து திரும்பிய திலீப் குப்தா தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அவர் வெளியிட்ட வீடியோவில் உணவு தரம், மற்றும் பிற வசதிகள் குறித்து அவர் விமர்சித்திருந்தார். 

.