This Article is From Feb 27, 2020

கொரோனா வைரஸ் அச்சம்: ஜப்பான் கப்பலில் தவித்த 119 இந்தியர்கள்… மீட்டுவந்த ஏர் இந்தியா விமானம்!

Coronavirus Outbreak: கொரோனா வைரஸ், 37 நாடுகளில் உள்ள 80,000 பேரைத் தாக்கியுள்ளது. இதுவரை 2,600 பேர் இந்த நோய்த் தொற்றால் இறந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சம்: ஜப்பான் கப்பலில் தவித்த 119 இந்தியர்கள்… மீட்டுவந்த ஏர் இந்தியா விமானம்!

Coronavirus Outbreak: முன்னதாக சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருந்த 640 இந்தியர்களை, இந்தியாவுக்கு அழைத்து வந்தது இந்திய அரசு தரப்பு.

ஹைலைட்ஸ்

  • கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 80,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • 2000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் இறந்துள்ளனர்
  • சீனாவின் ஹூபே மாகாணத்தில் இந்த நோய் தொற்று உருவானது
New Delhi:

Coronavirus Outbreak: கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது ஜப்பானுக்குச் சொந்தமான ஒரு கப்பலையும் பாதித்தது. அந்த ஜப்பான் நாட்டுக் கப்பலான ‘டயமண்டு பிரின்சஸ்'-ல் இருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்துதான், கப்பலிலிருந்தவர்களை நாட்டிற்குள் விடாமல், அதன் உள்ளேயே வைத்திருந்தது ஜப்பான் அரசு தரப்பு. 

அந்த கப்பலில் 138 இந்தியர்களும் சிக்கித் தவித்து வந்தனர். அவர்களில் 119 பேரை தற்போது ஏர் இந்தியா விமானம், பத்திரமாகத் தாயகம் மீட்டு வந்துள்ளது. இந்த மீட்பு நடவடிக்கைக்கு உதவி புரிந்த ஜப்பான் அரசு தரப்புக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், நன்றி தெரிவித்துள்ளார். 

அவர், “டோக்கியோவிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி வந்தடைந்தது. அதில் 119 இந்தியர்கள், இலங்கை, நேபாளம், தென் ஆப்ரிக்கா மற்றும் பெரு நாடுகளைச் சேர்ந்த தலா 5 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாகக் கப்பலிலேயே தங்கவைக்கப்பட்டவர்கள். அவர்களை மீட்க உதவி புரிந்தமைக்கு ஜப்பான் அரசுக்கு நன்றி. ஏர் இந்தியாவுக்கு மீண்டும் நன்றி” எனக் கூறியுள்ளார்.

டயமண்டு பிரின்சஸ் கப்பலில் 3,711 பேர் தங்கவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 138 இந்தியர்கள் அதிலிருந்தனர். அதில் 132 பேர் கப்பல் குழுவைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 6 பேர் பயணிகள். பிப்ரவரி 5 ஆம் தேதிதான், டயமண்டு பிரின்சஸ், நாட்டிற்குள் அனுமதிக்கப்படாமல் கடலிலேயே நிறுத்திவைக்கப்பட்டது. 

கப்பலிலிருந்த இந்தியர்களில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஜப்பானிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்படுவார்கள். 

கொரோனா வைரஸ், 37 நாடுகளில் உள்ள 80,000 பேரைத் தாக்கியுள்ளது. இதுவரை 2,600 பேர் இந்த நோய்த் தொற்றால் இறந்துள்ளனர். 

முன்னதாக சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்த 640 இந்தியர்களை, இந்தியாவுக்கு அழைத்து வந்தது இந்திய அரசு தரப்பு. ஹூபே மாகாணத்திலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது குறிப்பிடத்தக்கது. 

.