Read in English
This Article is From Mar 30, 2020

கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த 14 மருத்துவ ஊழியர்கள் தனிமைப்படுத்தல்!

நேற்று மாலை ஒரு செவிலியருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, அனைத்து மருத்துவ குழுவினரும் 14 நாட்கள் வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

Advertisement
இந்தியா Edited by

வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர் ஆர்எம்எல் மருத்துவ குழுவினர். (File)

Highlights

  • கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த 14 மருத்துவ ஊழியர்கள் தனிமைப்படுத்தல்
  • அவர்களது மாதிரிகளும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது
  • நேற்று மாலை ஒரு செவிலியருக்கு காய்ச்சல் ஏற்பட்டது
New Delhi:

டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், செவிலியர் உட்பட 14 மருத்துவ ஊழியர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களது மாதிரிகளும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நேற்று மாலை ஒரு செவிலியருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, அனைத்து மருத்துவ குழுவினரும் 14 நாட்கள் வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனையில் 6 மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், அதில் ஒரு செவிலியருக்கு நேற்று மாலை காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, ஒட்டுமொத்த மருத்துவ குழுவும் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளது. அவர்களது மாதிரிகளும் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

நாடு முழுவதும் 1,024 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் மட்டும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
 

Advertisement