கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் சேருமாறு மருத்துவ பட்டம் பெற்றவர்களை ஷிகா மல்ஹோத்ரா இன்ஸ்டாகிராம் பதிவில் கேட்டுக்கொண்டார்
New Delhi: இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் இயங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஷாருக்கானின் ஃபேன் திரைப்படத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா தற்போது மும்பை ஜோகேஸ்வரியில் உள்ள பாலாசாகேப் தாக்கரே மருத்துவ மையத்தில் செவிலியராக தன்னார்வ தொண்டு செய்து வருகிறார்.
கோவிட்19 வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டாற்ற என்னிடம் கருவி இருப்பதால் நான் அவர்களுக்கு உதவுவதற்கு முடிவு செய்தேன் என்று ஷிகா மல்ஹோத்ரா குறிப்பிட்டிருக்கிறார். இவர் முன்னதாக டெல்லியின் வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையில் நர்சிங் பட்டம் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஒரு செவிவியரைப் போலவும், பொழுதுபோக்கு கலைஞரைப் போலவும், உங்களின் ஆசீர்வாதம் இருந்தால் எப்போதும் என்னால் நாட்டிற்குச் சேவை செய்ய முடியும்.” என்று ஷிகா மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார். மேலும், “அரசு வேண்டிக்கொள்வதைப்போல வீட்டிலேயே பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருங்கள்.” என்றும் ஷிகா இன்ஸ்டாகிராமில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மருத்துவம் சார்ந்த பட்டம் பெற்றவர்கள் இந்த தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் இதர மருத்துவர்களோடு களம் காண வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
ஷிகா மல்ஹோத்ரா பிப்ரவரியில் வெளியான "காஞ்ச்லி" என்கிற பாலிவுட் திரைப்படத்தில் நடிகர் சஞ்சய் மிஸ்ராவுடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கும் செவிலியர்களின் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு நன்றி தெரிவிப்பதாக மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஒப்பிடமுடியாத அர்ப்பணிப்புடன் செயலாற்றும் செவிலியர்களுக்கு தன்னுடைய வணக்கத்தினை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். 2020 ஆம் ஆண்டை சர்வதேச செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் ஆண்டாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார். கொரோனா தொற்றால் தற்போது முடங்கியுள்ள இந்த தேசத்தினை நீங்கள் இன்னும் அதிக நம்பிக்கையுடன் வழிநடத்த முடியும் என்றும், நாடு நோயாளிகளைப் பற்றி மட்டுமல்ல, சுகாதார ஊழியர்கள் குறித்தும் கவலை கொண்டிருப்பதாகவும் பிரதமர் கூறியிருந்தார்.
முன்னதாக தேசிய அளவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு 50 மதிப்பிலான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.