This Article is From Mar 24, 2020

பிறந்த குழந்தைக்கு 'கொரோனா' எனப் பெயர் சூட்டிய பெற்றோர்!! என்ன காரணம் தெரியுமா?

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 500-யை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாட்டில் 19 மாநிலங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.

பிறந்த குழந்தைக்கு 'கொரோனா' எனப் பெயர் சூட்டிய பெற்றோர்!! என்ன காரணம் தெரியுமா?

கொரோனா என்ற பெயரை நியாயப்படுத்தும் வகையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • உத்தரப் பிரதேசத்தில் பெண் குழந்தைக்கு கொரோனா என பெயர் சூட்டப்பட்டுள்ளது
  • உலக மக்களை கொரோனா ஒற்றுமைப்படுத்தியதாக குழந்தையின் உறவினர் கருத்து
  • இந்தியாவில் 30 மாநிலங்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன
Gorakhpur:

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் சோகவுரா என்ற கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு 'கொரோனா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தைப் பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். அது கொரோனா என்ற பெயர் சூட்டலை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 500-யை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாட்டில் 19 மாநிலங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் சோகவுரா என்ற கிராமத்தில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. 

அதற்குப் பெற்றோரின் சம்மதத்துடன், குழந்தையின் மாமா நிதேஷ் திரிபாதி என்பவர் 'கொரோனா' என்று பெயர் சூட்டியுள்ளார்.

உலகம் முழுவதும் வைரலான இந்த வைரஸின் பெயரைக் கொண்ட குழந்தை, உத்தரப்பிரதேசம் முழுவதும் பிரபலம் ஆகி விட்டது. 

கொலைகார வைரஸின் பெயரையா குழந்தைக்குச் சூட்டுவார்கள் என்று பலரும் திரிபாதியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர், 'கொரோனா வைரஸ் ஆபத்தானது என்பதில் சந்தேகம் இல்லை. அது ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று வருகிறது. இருப்பினும், மக்களிடம் பல நல்ல பழக்கங்கள் ஏற்படுவதற்கு கொரோனா காரணமாக உள்ளது. கொரோனாவால் உலக மக்கள் ஒற்றுமையுடன் இருக்கின்றனர். இந்தக் குழந்தை மக்கள் ஒற்றுமையின் சின்னமாக, தீமைகளை எதிர்த்துப் போராடுபவளாக இருப்பார்' என்று பதில் அளித்துள்ளார். 

.