மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.
ஹைலைட்ஸ்
- கிருமி நாசினிகளை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை
- இந்தியாவில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு
- கொரோனாவை தடுக்க மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பாடு
New Delhi: கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கிருமி நாசினிகளைப் பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராகத் தனது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாங்கள் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.
"டெல்லி மெட்ரோ ரயில் பெட்டிகள் மற்றும் டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்துகளும் சுத்திகரிக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியமாக இருப்பவர்கள் முகமூடி அணியத் தேவையில்லை" என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவில் இதுவரை 43 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
கேரளா, டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் ஜம்மு ஆகிய நாடுகளிலிருந்து தலா ஒவ்வொருவர் என ஞாயிற்றுக்கிழமை முதல் கொரோனாவால் நான்கு பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய் இதுவரை நாட்டில் எந்த உயிரிழப்பையும் ஏற்படுத்தவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சின் சிறப்புச் செயலாளர் சஞ்சீவ குமார் தெரிவித்தார்.