அரசு அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம்போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது தமிழக அரசு
- டாஸ்மாக் 14 நாட்களுக்கு மூடப்படுவது என்பது இதுவே முதல்முறையாகும்
- பல்வேறு மாநிலங்களும் 2 வாரத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன
கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மார்ச் 31-ம்தேதி வரை மூடுவதற்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் திட்டமிட்டபடி 10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வுகள் நடைபெறும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் தலைமையின் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-
தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள் மார்ச் 31-ம்தேதி வரை மூடப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான அனைத்து உத்தரவுகளும் நாளை முதல் நடைமுறைக்கு வரும்.
டாஸ்மாக் கடைகள்,திரையரங்குகள், பார், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கிளப்புகள் உள்ளிட்டவையும் மார்ச் 31-ம்தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.
அரசு அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம்போல செயல்படும்.
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படும் என்பதால் சுற்றுலா செல்வதற்குத் திட்டமிடக்கூடாது. அவ்வாறு பரப்பினால் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரயில், பஸ் போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளை மக்கள் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். பொது இடங்களில் மக்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருமண மண்டபங்களில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர்த்து மற்ற நிகழ்ச்சிகளுக்கு முன் பதிவு செய்ய வேண்டாம். கோயில், மசூதி, தேவாலயங்களில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தமிழக அரசின் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.