கிழக்கு டெல்லி மக்களவை உறுப்பினர் கவுதம் கம்பீர் (கோப்பு)
New Delhi: தேசிய அளவில் நாடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கக்கூடிய நிலையில், பிரதமர் மக்களிடம் இந்த தடுப்பு நடவடிக்கைக்கு தங்களால் இயன்ற பங்களிப்பினை செய்திடுமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பா.ஜ.கவின் கிழக்கு டெல்லி மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீர் தன்னுடைய இரண்டு ஆண்டு ஊதியத்தினை பிரதமரின் நிவாரண நிதிக்கு கொடுத்திருக்கிறார். மேலும், தேசிய அளவில் 1965 மக்களை தாக்கி, 50க்கும் மேற்பட்டோரை கொன்றிருக்கும் கொடிய கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் தாராளமாக நிதியளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
முன்னதாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க டெல்லி அரசு மருத்துவமனை உபகரணங்களை வாங்க கம்பீர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் ஒதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் அறிவித்திருக்கும் இந்த புதிய நிதியானது கொரோனா தொற்றுக்கு எதிரான இவரது இரண்டாவது பங்களிப்பாகும்.
அவசரக் கால நிலைமையைச் சரிசெய்ய பிரதமர், புதிய நிதியை உருவாக்குவதற்கு மக்கள் தங்கள் ஆதரவை அரசுக்கு கொடுக்குமாறு சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த புதிய அறக்கட்டளையின் தலைவராக பிரதமரும், இதர உறுப்பினர்களாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் இறந்துள்ளனர். மேலும், 328 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 50க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றனர். 151 பேர் குணமடைந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.