Read in English
This Article is From Mar 06, 2020

கொரோனா அச்சுறுத்தலால் ஆசிய பாதுகாப்பு மாநாட்டை ஒத்தி வைத்தது மத்திய அரசு!!

ஆண்டுதோறும் ஆசிய பாதுகாப்பு மாநாட்டை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதில் பாதுகாப்பு, உலக விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

Advertisement
இந்தியா Edited by

மார்ச் 12 - 13 தேதிகளில் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

Highlights

  • கொரோனாவால் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது
  • ஆண்டுதோறும் ஆசிய பாதுகாப்பு மாநாடு நடத்தப்படும்
  • மாநாடு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது
New Delhi:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆசிய பாதுகாப்பு மாநாட்டை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது. 

ஆசிய பாதுகாப்பு மாநாடு பாதுகாப்புத்துறையின் பாதுகாப்பு கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தால் (IDSA) ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மாநாட்டின்போது பாதுகாப்பு திட்டங்கள், சர்வதேச விவகாரங்கள், அந்தந்த நாடுகளுக்கான சவால்கள், எதிர்கொள்ளும் விதம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். 

இந்தாண்டு 21-வது ஆசிய பாதுகாப்பு மாநாடு மார்ச் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மாநாட்டை ஒத்தி வைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பின்னர் ஏதுவான தேதியில் மாநாடு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

பாதுகாப்புத் துறை வல்லுநர், கல்வியாளர்கள், முன்னாள் கொள்கை வகுப்பார்கள், தொழில்துறைத் தலைவர்கள், போர்த் தந்திர வல்லுநர்கள் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள். 

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இன்று ராஜ்யசபாவில், கொரோனா வைரஸ் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். 

Advertisement

கடைசியாக பேடிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஊழியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் குர்கானில் உள்ள அந்நிறுவனத்தில் அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா, தற்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இதற்காக இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகாரிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சீனா, ஈரான், தென்கொரியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு மக்கள் பயணம் செய்ய வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதேபோல், மற்ற இதர நாடுகளுக்கும் தேவையில்லாத பயணத்தைத் தவிர்க்குமாறும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

Advertisement

கொரோனா வைரஸலால் உலகளவில் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான மருந்து மே மாதம் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement