Read in English
This Article is From Apr 24, 2020

“இப்படி செஞ்சு கொரோனாவை குணப்படுத்திட்டா என்ன?”- டிரம்பின் வைரல் ஐடியா!

Coronavirus: “ஒரு பொருளின் மீதோ அல்லது காற்றிலோ இருக்கும் கொரோனா வைரஸை சூரிய வெளிச்சம் அழிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது"

Advertisement
உலகம் Edited by

“அதேபோல கிருமிநாசினி, ஒரு நிமிஷத்தில் கொரோனா வைரஸை அழித்துவிடுகிறது என்று கேள்விப்பட்டேன்"

Highlights

  • சூரிய வெளிச்சத்தால் கொரோனா வைரஸ் அழிகிறது: அமெரிக்க ஆய்வு
  • அமெரிக்க ஆய்வை மேற்கோள் காட்டி டிரம்ப் பேச்சு
  • டிரம்பின் பேச்சு படுவைரலாக மாறியுள்ளது
New Delhi:

அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி ஒருவர், சமீபத்தில் விஞ்ஞானிகளால் செய்யப்பட்ட ஆய்வில் சூரிய வெளிச்சத்தால் கொரோனா வைரஸ் சீக்கிரமாக அழிகிறது என்று கண்டுபிடித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு இன்னும் பொதுத் தளத்தில் வைக்கப்படவில்லை. மேலும், அது குறித்து வெளியில் இருந்து யாரும் ஆராய்ச்சி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்க ஹோம்லேண்டு பாதுகாப்புத் துறை செயலாளரின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசகரான வில்லியம் பிரியன், வெள்ளை மாளிகையில் இது குறித்த தகவலை வெளியிட்டார். அவர், சூரிய ஒளியால் வெளிப்படும் அல்ட்ரா வயலெட் கதிர்கள், கொரோனா வைரஸை அழிப்பதில் பங்கு வகிப்பதாகவும், இதனால் வெயில் காலத்தில் வைரஸ் தொற்று குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். 

“ஒரு பொருளின் மீதோ அல்லது காற்றிலோ இருக்கும் கொரோனா வைரஸை சூரிய வெளிச்சம் அழிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

அதேபோல ஒரு இடத்தில் வெப்பத்தின் அளவு அதிகரித்தாலோ அல்லது ஈரப்பதம் குறைந்தாலோ அது வைரஸுக்கு சாதகமான சூழலாக இருக்கவில்லை,” என்கு விளக்கினார் வில்லியம். 

இதை மேற்கோள் காட்டி அமெரிக்க அதிபர் னொனால்டு டிரம்ப், “நம் உடலின் மீது மிகவும் சக்தி வாய்ந்த ஒளி அல்லது அல்ட்ரா வயலெட் கதிர்களை காட்டினால், அது கொரோனா வைரஸை அழிக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். இன்னும் அது சரிவர சோதனை செய்யப்படவில்லை என்று கூறியுள்ளீர்கள். எனவே அதை செய்து பார்த்தால் என்ன?” என்று கூறியுள்ளார்.

Advertisement

மேலும் அவர், “அதேபோல கிருமிநாசினி, ஒரு நிமிஷத்தில் கொரோனா வைரஸை அழித்துவிடுகிறது என்று கேள்விப்பட்டேன். எனவே இந்த கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்தி க்ளீன் செய்ய முடியுமா? கொரோனா வைரஸ் நுரையீரலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. எனவே, இந்த யோசனை எனக்கு மிகவும் பிடித்துள்ளது,” என்று பேசினார். அவர் எந்த கிருமிநாசினியை வைத்து இந்த நடவடிக்கையை எடுக்கலாம் என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை. 

இன்னும் ‘சூரிய வெளிச்சம்' ஆய்வு குறித்து வெளியிலிருந்து யாரும் ஆராயாத நிலையில், அது குறித்து உறுதி செய்யப்பட்ட தகவல்களை பொதுத் தளத்தில் இருப்பவர்களால் சொல்ல முடியவில்லை.

Advertisement

மேலும், ஆய்வில் சரியாக எந்த அளவிலான கதிர்கள் பயன்படுத்தப்பட்டது என்றும், அதே வகையில் சூரிய வெளிச்சத்தில் இயற்கையாக வெளிப்படும் கதிர்கள் செயல்படுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் வில்லியம், “வெயில் காலம் வரவுள்ளதால் அது வைரஸை முற்றிலும் அழித்துவிடும் என்ற முடிவுக்கு வரக் கூடாது. இந்த ஆய்வு முடிவில் கூட, வைரஸ் சூரிய வெளிச்சத்தினால் மட்டும் முற்றிலும் அழிந்துவிடும் என்று சொல்லப்படவில்லை. எனவே, தொடர்ந்து சமூக விலகலையும் கட்டுப்பாடுகளையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்,” என்றும் எச்சரித்துள்ளார். 

Advertisement

இதற்கு முன்னர் கொரோனா வைரஸ் குறித்து செய்யப்பட்ட ஆய்வுகளும், அது மிகவும் குளிரான சூழலில் வேகமாக வளர்ந்ததையும், மிகவும் வெப்பமான சூழலில் அந்தளவுக்கு வளர முடியவில்லை என்பதையும் சுட்டிக்காட்டின. 

Advertisement