This Article is From Mar 18, 2020

கொரோனா சோதனையில் 100 சதவீதம் வெளிப்படையாக உள்ளோம்; சுகாதாரத்துறை அமைச்சகம்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவில் மூன்றாவதாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மும்பையை சேர்ந்த அந்த 68 வயது நபர் துபாயில் சென்று திரும்பியுள்ளார். எனினும், தனது பயண விவரத்தை அதிகாரிகளிடம் மறைத்துள்ளார்.

கொரோனா சோதனையில் 100 சதவீதம் வெளிப்படையாக உள்ளோம்; சுகாதாரத்துறை அமைச்சகம்

உலக முழுவதும் 1.7 லட்சம் மக்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • உலக முழுவதும் 1.7 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.
  • கொரோனா சோதனையில் 100 சதவீதம் வெளிப்படையாக உள்ளோம்;
  • இந்திய ராணுவத்தில் முதன் முதலாக ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு
New Delhi:

இந்திய ராணுவத்தில் முதன் முதலாக ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த ராணுவ வீரர், இந்திய ராணுவத்தின், லடாக் ஸ்கவுட்ஸ் படையைச் சேர்ந்தவர் ஆவார். தற்போது, அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

சவுதி அரேபியா சென்று திரும்பிய முன்னாள் உள்துறை அமைச்சர் சுரேஷூக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்தது. எனினும், 14 நாட்கள் அவர் வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இந்தியாவில் 147 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்புக்கு இந்தியாவில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த அந்த 68 வயது நபர் துபாயில் சென்று திரும்பியுள்ளார். எனினும், தனது பயண விவரத்தை அதிகாரிகளிடம் மறைத்துள்ளார். 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் லாவ் அகர்வால் கூறும்போது, இந்தியாவைப் பொருத்தவரை நாங்கள் 100 சதவீதம் வெளிப்படையாக உள்ளோம். நாங்கள் நெறிமுறைகளைப் பின்பற்றுகிறோம். பீதியை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக அரசு எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. 

சோதனை செய்ய வேண்டும் என்று கூறி மக்களை நாங்கள் சோதிக்க விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை நாங்கள் தொடர்ந்து, புதுப்பித்து வருகிறோம். கடந்த ஜன.21ம் தேதி முதல் தற்போது வரை ஒரு நாளைக்கு 700 என்ற கணக்கில் இந்தியாவில் 11,500 மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கொரோனா உருவாகிய சீன நாட்டிற்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், கொரோனா போன்ற தொற்று நோய்களைக் கண்டறிய சோதனை வசதிகள் குறைவாக இருப்பதால் பலர் கவலை தெரிவித்துள்ளனர். தென்கொரியாவில் ஒரு நாளில் 15,000 சோதனைகள் என இதுவரை 2 லட்சம் அளவில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது வரை பயண வரலாறு இல்லாத ஆனால் கொரோனா அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் வரையறுக்கப்பட்ட வசதிகளைக் கருத்தில் கொண்டு சோதிக்கப்படுவதில்லை. ஆனால் தொற்றுநோய்களின் அளவையும் அதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் கண்டறிவதற்கு இத்தகைய சோதனைகள் அவசியம். 

.