உ.பி. சுகாதார அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் (கோப்பு) என்.டி.டி.வி.
New Delhi: ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்து கொண்ட உத்தரப்பிரதேச சுகாதார அமைச்சர் ஜெய் பிரதாப் சிங், நாவல் கொரோனா வைரஸால் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் சுயமாக தனிமைப்படுத்திக்கொண்டார் என வெள்ளிக்கிழமை என்டிடிவிக்கு தெரிவித்திருந்தார். மேலும், பாடகி கனிகா கபூர் உடன் இந்த விழாவில் பங்கேற்ற அனைவரையும் தொடர்பு கொண்டு அடையாளம் காண முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கனிகா கபூர் பங்கேற்ற விருந்தில் பாஜக எம்.பி. துஷ்யந்த் சிங் மற்றும் அவரது தாயார், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே உட்படப் பல தலைவர்களும் இருந்தனர். துஷ்யந்த் சிங் பின்னர் பாராளுமன்றத்தில் கலந்து கொண்டார், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை கூட சந்தித்தார், இது தொற்றுநோய் குறித்த அச்சத்தைத் தூண்டியுள்ளது.
" பிறந்தநாள் விழா கடந்த 14-ம் தேதியன்று ஒரு தனியார் இல்லத்தின் தோட்டத்தில் நடைபெற்றது. நானும் எனது குடும்பமும் லக்னோவைச் சேர்ந்த மற்ற முக்கிய குடும்பங்களுடனும் டெல்லியைச் சேர்ந்த சிலருடனும் இந்த விழாவில் கலந்துகொண்டோம். நான் ஒரு மணி நேரம் அங்கேயே தங்கி இருந்து பின்னர் வெளியேறினேன்," என்று சிங் வெள்ளிக்கிழமை இரவு என்டிடிவிக்கு தெரிவித்தார்.
மக்கள் தங்களுக்கு தொடர்பு கொள்ளும் வாய்ப்புகளைக் குறைக்க, சமூக தொலைதூர பயிற்சி - அல்லது மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தை (குறைந்தது 1 மீட்டர்) வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தில் கூட்டங்களுக்கு எதிராக மக்களை எச்சரிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் உ.பி. சுகாதார அமைச்சரிடம் கேட்கப்பட்டது. அடுத்த வாரம் உ.பி.யின் அயோத்தியில் ராம் நவாமி விழாக்கள் தொடங்கும் நிலையில் பண்டிகையின் இறுதி இரண்டு நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"உ.பி.யில், அதிகாரிகள் முக்கிய அரசியல் தலைவர்களிடம் பெரிய அளவிலான கூட்டங்களுக்கு எதிராக ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொண்டனர். திருவிழா நடப்பதை நீங்கள் தடுக்க முடியாது, ஆனால் மக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்ள வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம்," என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை இந்த விழாவின் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் ஒருவர் என்.டி.டி.வி யிடம், விழாக்களின் தொடக்கத்தைக் குறிக்கும் "ராம் கோட் பரிக்ரமா" நிகழ்வு ரத்து செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
இதேபோல், கனிகா கபூர் லண்டனில் இருந்து திரும்பியபோது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ உதவி பெற முயன்றதாகவும், ஆனால் அதிகாரிகள் மருத்துவ உதவியளிக்க தவறியதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கனிகா கபூருக்கு உதவி கிடைக்காதது குறித்துக் கேட்டபோது, "எங்கோ ஏதோ தவறு ஏற்பட்டது ..." என்று சிங் கூறினார், "இது போன்ற ஒரு சூழ்நிலையில், அவர் தொடர்பு கொண்ட அனைவரையும் அடையாளம் காண நாங்கள் தொடர்பு தடங்களைப் பின்தொடர்ந்துள்ளோம். இந்த விஷயத்தில், விருந்தில் பங்கேற்ற அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு தங்களை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது ".
இதற்கிடையில், உத்தரப்பிரதேச பாஜக பொதுச் செயலாளர் பங்கஜ் சிங் உட்பட மூன்று பாஜக எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை கிரேட்டர் நொய்டாவில் ஜெய் பிரதாப் சிங்கை சந்தித்த பின்னர் சுய தனிமையில் சென்றுள்ளனர்.
COVID-19 பரவல், கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வுஹான் மாவட்டத்தில் தொடங்கியதாக நம்பப்படுகிறது, இந்தியாவில் 220 க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது மற்றும் நான்கு பேர் இறந்திருக்கின்றனர். உலகளவில் இந்த தொற்று நோய் 8,000 க்கும் அதிகமானோரைக் கொன்றிருக்கின்றது. மேலும், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.