இந்த பொருட்கள் ஜூன் இறுதி வரை அத்தியாவசிய பொருட்கள் பிரிவின் கீழ் இருக்கும்
New Delhi: முககவசம், கை சுத்திகரிப்பு மருந்துகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக "அத்தியாவசிய பொருட்கள்" என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பயத்தை அடுத்து, இந்த பொருட்கள் பற்றாக்குறை மற்றும் கள்ளத்தனமான சந்தைப்படுத்துதலை கட்டுப்படுத்துவதற்கு எதிராக மத்திய அரசு இந்த முடிவினை மேற்கொண்டுள்ளது. இதில் N95 உள்ளிட்ட முகமூடிகள் மற்றும் கை சுத்திகரிப்பு மருந்துகள் போன்றவை '' அத்தியாவசிய பொருட்கள் '' என்ற வரையறைக்குள் வரும் என்று அரசு அறிவித்திருக்கிறது.
இந்த பொருட்கள் ஜூன் இறுதி வரை அத்தியாவசிய பொருட்கள் பிரிவின் கீழ் இருக்கும், இது நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்வதையும், பதுக்கல்காரர்கள் / கள்ளத்தனமாக சந்தைப்படுத்துபவர்களைத் கட்டுப்படுத்தவும் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
2020 ஜூன் 30 வரை முககவசம் (2 பிளை மற்றும் 3 பிளை அறுவை சிகிச்சை முககவசம், N95 முககவசம்) மற்றும் கை சாண்டீசர்களை அத்தியாவசியப் பொருட்களாக அறிவித்து, அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் ஒரு உத்தரவை அரசாங்கம் அறிவித்துள்ளது.
முககவசம் மற்றும் கை சுத்திகரிப்பு பொருட்களின் விநியோகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும், இந்த பொருட்களின் விற்பனை மற்றும் கிடைப்பை அணைவருக்குமானதாகவும் மாற்றவும், ஊக வணிகர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்த சட்ட முடிவு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் அதிகாரம் அளித்துள்ளது.
"COVID-19 இன் பரவல் காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களில் முககவசம் மற்றும் கை சுத்திகரிப்பு மருந்துகள் பெரும்பாலான இடங்களில் கிடைக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தையில் விற்பனையாளர்கள் அதிக விலையில் விற்பது, பொதுமக்களுக்கு சிரமத்தை உருவாக்குகின்றது." என்று அரசாங்க உத்தரவு தெரிவித்துள்ளது.
எனவே இதன் அடிப்படையிலேயே மேற்குறிப்பிடப்பட்ட பொருட்கள் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் அரசு இணைத்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் ஒருவர் குற்றம் புரிவாரெனில் அவர் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.