Read in English
This Article is From Feb 29, 2020

பரவும் கொரோனா : 'பணக்கார நாடுகள் உதவ முன்வர வேண்டும்' - பில் கேட்ஸ்

WHO அவசரக்கால திட்டத்தின் தலைவர் டாக்டர் மைக் ரியான் "உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகள் இன்னும் தயாராக இல்லை" என்று கூறினார்

Advertisement
உலகம்

சுகாதார அமைப்பினை வலுப்படுத்த பணக்கார நாடுகள் உதவ வேண்டும் என்று பிரபல தொழிலதிபர் பில் கேட்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கூறியுள்ளார்.

Highlights

  • சுகாதார அமைப்பினை வலுப்படுத்த பணக்கார நாடுகள் உதவ வேண்டும்
  • இந்த வைரஸின் உலகளாவிய சுழற்சியை குறைக்கலாம்
  • "நியூ இங்கிலாந்து ஜௌர்னல்ஸ்" என்ற மருத்துவ பத்திரிக்கையில் கூறியுள்ளார்
Chicago:

உலக முழுதும் பரவி வரும் கொரோனா நோய்த் தொற்றினை தடுக்க குறைந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில்  உள்ள சுகாதார அமைப்பினை வலுப்படுத்தப் பணக்கார நாடுகள் உதவ வேண்டும் என்று பிரபல தொழிலதிபர் பில் கேட்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கூறியுள்ளார். "ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் உள்ள நாடுகளை இந்த நோய் எதிர்ப்பிற்கு இப்போதே தயார்ப்படுத்த உதவுவதன் மூலம்," நம்மால் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்றும், மேலும் இந்த வைரஸின் உலகளாவிய சுழற்சியைக் குறைக்கலாம் என்று மைக்ரோசாப்ட் கார்ப் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், தலைமை நிர்வாகியுமான திரு. கேட்ஸ் "நியூ இங்கிலாந்து ஜௌர்னல்ஸ்" என்ற மருத்துவ பத்திரிக்கையில் கூறியுள்ளார்.

சீனாவில் முதன்முதலில் தோன்றி இப்போது உலகளவில் சுமார் 46 நாடுகளுக்குப் பரவியிருக்கும் இந்த கொரோனா வைரஸ், மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றிய விணிஸிஷி நோய் அல்லது சுவாச கோளாறுகளை ஏற்படுத்தும் ஷிகிஸிஷி போன்ற வைரஸ்களை விடக் கட்டுப்படுத்த மிகவும் கடினமான ஒன்று என்று அவர் கூறினார். பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஏற்கனவே 100 மில்லியன் டாலர்களை இந்த கொரோனா நோய்த் தொற்று பரவலை எதிர்த்துப் போராட நிதியாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்னர் அதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கீபிளி எல்லா நாட்டு அரசுகளையும் கேட்டுக்கொண்டது. பல நாட்டு அரசுகளின் கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கை, இந்த வைரஸ் பரவலைக் குறைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஒரு செய்தி மாநாட்டில் பேசிய கீபிளி அவசரக்கால திட்டத்தின் தலைவர் டாக்டர் மைக் ரியான் "உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகள் இன்னும் தயாராக இல்லை" என்று கூறினார்.

பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த, நோய் கண்காணிப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் முதலீடு செய்ய வேண்டும் என்று திரு கேட்ஸ் கூறினார். மேலும் தொழில்நுட்ப தீர்வுகளைத் தவிர, சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் தரவு பகிர்வில் உலக நாடுகள் ஈடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement