மற்ற ரயில்வே மண்டலங்களும் டிக்கெட் விலை உயர்வை அறிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- பிளாட் பார்ம் டிக்கெட் ரூ. 10-ல் இருந்து ரூ. 50- ஆக உயர்த்தப்பட்டுள்ளது
- கூட்டம் கூடுவதை குறைக்க ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
- இந்தியாவில் 137 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
New Delhi: ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலை ரூ. 10-லிருந்து ரூ. 50-ஆக உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகப் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் ரயில்வே நிலையங்களில் கூடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
மேற்கு ரயில்வே மண்டலத்தின் மும்பை, ரத்ளம், ராஜ்கோட், பாவ்நகர், வடோத்ரா, அகமதாபாத் ஆகிய 6 நகரங்களில் பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களில் சுமார் 250 ரயில் நிலையங்கள் உள்ளன.
மற்ற ரயில்வே மண்டலங்களும் டிக்கெட் விலை உயர்வை அறிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு மண்டலத்தில் சென்னையில் மட்டும் பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே மண்டலத்தில் வரும் மும்பை, புசாவால், நாக்பூர், சோலாப்பூர், புனே ஆகிய நகரங்களிலும் பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே மூத்த அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகக் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.' என்றார்.
முன்னதாக கடந்த மார்ச் 2015-ல் ரூ. 5-ஆக இருந்த ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலை ரூ. 10-ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு பிளாட்பார்மில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தியாவில் 137 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)