This Article is From Mar 21, 2020

கொரோனா வைரஸ் பாதித்த பாடகி மீது போலீசார் வழக்குப்பதிவு!

கனிகா கபூர் குறைந்தது மூன்று முறையாவது, பெரும் கூட்டமாக நண்பர்களை சந்தித்துள்ளார் என்பதால், ஹஸ்ரத்கஞ்ச் மற்றும் கோம்டிநகர் காவல் நிலையங்களில் கனிகா கபூருக்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்படலாம்.

கொரோனா வைரஸ் பாதித்த பாடகி மீது போலீசார் வழக்குப்பதிவு!

சரோஜினி நகர் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • கொரோனா பாதித்த பாடகி மீது போலீசார் வழக்குபதிவு!!
  • கனிகா கபூர் சமீபத்தில் பல்வேறு விருந்துகளில் பங்கேற்றுள்ளார்
  • லக்னோ தலைமை மருத்துவ அதிகாரியின் புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு
Lucknow:

பிரபல பாலிவுட் பாடகியான கனிகா கபூர் சமீபத்தில் பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது அலட்சியம் மற்றும் ஒத்துழையாமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக காவல் ஆணையர் சுர்ஜித் பாண்டே கூறும்போது, சரோஜினி நகர் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

"ஐபிசி பிரிவுகள் 269 (கவனக்குறைவான செயலால், உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றைப் பரப்ப வாய்ப்புள்ளது), 270 (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ள தீங்கு விளைவிக்கும் செயல்), 188 (அரசு ஊழியரின் உத்தரவுக்கு ஒத்துழைக்காமை) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சரோஜினி நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

லக்னோ தலைமை மருத்துவ அதிகாரியின் புகாரின் பேரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஹஸ்ரத்கஞ்ச் மற்றும் கோம்திநகர் காவல் நிலையங்களில் கனிகா கபூருக்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்படலாம். ஏனெனில், அவர் அந்த அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குறைந்தது மூன்று விருந்துகளில் பங்கேற்றுள்ளார். 

.