இதுவரை 8,85,577 பேர் குணமடைந்துள்ளனர்
ஹைலைட்ஸ்
- கடந்த 24 மணி நேரத்தில் 48,661 பேர் புதியதாக பாதிப்பு
- 705 பேர் உயிரிழந்துள்ளனர்
- இதுவரை 8,85,577 பேர் குணமடைந்துள்ளனர்
New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 13,85,222 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48,661 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 705 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது 4,67,882 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 8,85,577 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 32,063 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைக்கு 4,42,263 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 1,62,91,331 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.