This Article is From Aug 10, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்தை கடந்தது; இதுவரை 44,386 பேர் உயிரிழப்பு!

இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 15.3 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் விகிதமானது 69.33 ஆக உள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்தை கடந்தது; இதுவரை 44,386 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்தை கடந்தது; இதுவரை 44,386 பேர் உயிரிழப்பு!

New Delhi:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 62,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 22 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 44,386 ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 15.3 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் விகிதமானது 69.33 ஆக உள்ளது. 

தொடர்ந்து, நான்காவது நாளாக இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 60,000க்கும் மேல் பதிவாகியுள்ளது. கடந்த 6ஆம் தேதி முதல் தற்போது வரை 2 லட்சத்திற்கும் மேலாக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்த மூன்று வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது. 

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆறு நாட்களாக அமெரிக்கா, பிரேசிலை விட பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் அதிகம் பதிவாகி வருகிறது. இந்தியாவை விட பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சம் கூடுதலாக பிரேசிலில் உள்ளது. அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சமாக உள்ளது. அமெரிக்காவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சமாக உள்ளது. 

இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு கடந்த ஜனவரி 30ம் தேதி கேரளாவில் பதிவான நிலையில், அதிலிருந்து 193 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சமாக அதிகரித்துள்ளது. நாட்டில் ஒரு லட்சம் பாதிப்பு எண்ணிக்கை மே.19ம் தேதி பதிவானது. 

மகாராஷ்டிரா (12,248), ஆந்திரா (10,820), தமிழகம் (5,994), கர்நாடகா (5,985), உத்தர பிரதேசம் (4,571), பீகார் (4,157) மேற்குவங்கம் (2,939) உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமான புதிய தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிரா (390), தமிழகம் (119), கர்நாடகா (107), ஆந்திரா (97), மேற்கு வங்கம் (54), உத்தர பிரதேசம் (41), குஜராத் (24) என 82 சதவீத உயிரிழப்புகள் இந்த ஏழு மாநிலங்களில் பதிவாகியுள்ளன. 

மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மொத்த கொரோனா பாதிப்புகளில் 61.5 சதவீதத்திற்கும், மொத்த உயிரிழப்புகளில் 72.16 சதவீதத்திற்கும் பதிவாகியுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களில் இருந்து சுமார் 13.63 லட்சம் பாதிப்பு எண்ணிக்கையும், 32,029 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

உலகளவில், இதுவரை 1.98 கோடிக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 7.31 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

.