বাংলায় পড়ুন Read in English
This Article is From Jul 10, 2020

அச்சுறுத்தும் கொரோனா! ஒரே நாளில் நாடு முழுவதும் 26,506 பேர் பாதிப்பு!!

இதுவரை நாடு முழுவதும் 1,10,24,491 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  நேற்று மட்டும் 2,83,659 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Advertisement
இந்தியா

Highlights

  • நாடு முழுவதும் கொரோனா எண்ணிக்கை 7,93,802 ஆக அதிகரிப்பு
  • 2,76,658 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
  • 21,604 பேர் உயிரிழந்துள்ளனர்.
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 7,93,802 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,76,658 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 4,95,513 பேர் குணமடைந்துள்ளனர். 21,604 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் 26,506 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 475 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் குணமடைந்தோரின் விகிதம் 61 சதவிகதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 1,10,24,491 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  நேற்று மட்டும் 2,83,659 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement