Coronavirus Cases, India:இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனாவால் 55,000 பேர் பாதிப்பு!
New Delhi: இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 55,000ஐ கடந்துள்ளது. அதேபோல், இதுவரை இல்லாத அளவில் நேற்றைய தினம் மட்டும் 6.42 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்தை அடைந்த 3 நாட்களில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று மட்டும் 779 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 35,747 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை கடக்க 183 நாட்கள் ஆகியுள்ளன. கடந்த ஜனவரி 30ம் தேதி நாட்டின் முதல் கொரோனா நோயாளியை கேரளா அரசு அறிவித்தது. அதிலிருந்து, சரியாக 110 நாட்களுக்கு பின்னர் இந்தியா பாதிப்பு எண்ணிக்கையில் 1 லட்சத்தை கடந்தது.
நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணிக்கை மற்றும் மொத்த பாதிப்புகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணிக்கை ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளது. உலகின் கடுமையான ஊரடங்கான ஒன்றை அரசு தளர்த்திய பின்னர், இந்த தொற்று பரவுவது குறைவதாக, மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்தியா இதுவரை மொத்தம் 1,88,32,970 மாதிரிகளை பரிசோதித்துள்ளது. நாட்டில் சுமார் 130 கோடி மக்கள் தொகை உள்ளது மற்றும் ஒரு நோயாளி குணமடையும் வரை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பரிசோதிக்கப்படலாம்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயை அதன் மக்கள்தொகை மற்றும் அளவைக் கொண்டு நிறுத்த இந்தியா நோய் எதிர்ப்பு சக்தியை நம்ப முடியாது, என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவை முழுமையாக வெல்ல நாடு தடுப்பூசியை மட்டுமே நம்ப வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 11,000 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 4,11,798 ஆக உள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அம்மாநிலத்தில் பதிவாகியுள்ளன, அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 2,39,978 வழக்குகள், டெல்லியில் 1,34,403 வழக்குகள் பதிவாகியுள்ளன.
உலகளவில், இதுவரை 1.72 கோடி மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 6.72 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றுநோயின் மையப்பகுதியாக உள்ள அமெரிக்காவில் இதுவரை 44 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன.