This Article is From Sep 22, 2020

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 55 லட்சத்தினை கடந்தது!!

தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதமானது 80.86 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களின் கொரோனா எண்ணிக்கையானது ஒட்டு மொத்த பாதிப்பில் 60 சதவிகிதத்தினை கொண்டுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 55 லட்சத்தினை கடந்தது!!
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 55 லட்சத்தினை கடந்துள்ளது.

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஒரு நாள் கொரோனா எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 75,083 பேர் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல 1,053 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 55, 62,664 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 88,935 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 9,75,861 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 44,97,868 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதமானது 80.86 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களின் கொரோனா எண்ணிக்கையானது ஒட்டு மொத்த பாதிப்பில் 60 சதவிகிதத்தினை கொண்டுள்ளது. 

தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதமானது 17.54 ஆக குறைந்துள்ளது. அதே போல உயிரிழப்பு விகிதமானது 1.59 சதவிகிதமாக உள்ளது. பரிசோதிக்கப்படுவோரில் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையானது 8.02 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

.