Read in English
This Article is From Jul 02, 2020

நாடு முழுவதும் இதுவரை 17,834 பேர் உயிரிழப்பு! 6 லட்சத்தைக் கடந்தது மொத்த பாதிப்பு!!

இதுவரை 90,56,173 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று மட்டும் 2,29,588 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Advertisement
இந்தியா Posted by

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 17,834 பேர் உயிரிழந்துள்ளனர்.

Highlights

  • நாடு முழுவதும் கொரோனா எண்ணிக்கையானது 6,04,641 ஆக அதிகரித்துள்ளது
  • தற்போது 2,26,947 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • 17,834 பேர் உயிரிழந்துள்ளனர்.
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 6,04,641 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,26,947 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,59,860 பேர் குணமடைந்துள்ளனர். 17,834 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் 19,148 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 434 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை 90,56,173 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று மட்டும் 2,29,588 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் குணமடைந்தோரின் விகிதமானது 59.51 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையானது 8.34 சதவிகிதமாக உள்ளது.

Advertisement

கடந்த ஜனவரியில் கேரளாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து 110 நாட்களில் இந்தியா ஒரு லட்சம் நோயாளிகளை தொட்டது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துள்ளது.

மே 19 தேதியிலிருந்து ஜூன் 3 வரை நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2 லட்சமாக உயர்ந்தது. அடுத்த பத்து நாட்களில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சமாக உயர்ந்துள்ளது. ஜூன் 21 அன்று இந்த எண்ணிக்கை 4 லட்சமாக உயர்ந்தது. ஜூன் 27 நிலவரப்படி இந்தியாவின் ஒட்டு மொத்த பாதிப்பு 5.08 லட்சமாக உயர்ந்திருந்தது.

Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா (5,537), தமிழ்நாடு (3,882), டெல்லி (2,442), கர்நாடகா (1,272) மற்றும் தெலுங்கானா (1,018) - புதிய கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகம் பதிவு செய்துள்ளன.

உயிரிழப்புகளை பொறுத்த அளவில், கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 198 பேரும்,  தமிழகத்தில் 63 பேரும் டெல்லியில் 61 பேரும் அதிகபட்சமாக உயிரிழந்துள்ளனர். அதே போல குஜராத் மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா 21 நபர்கள் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

கோவாக்சின்(COVAXIN) என்கிற, கொரோனா தொற்றுக்கு எதிரான உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பு மருந்தினை பரிசோதிப்பதற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் இதுவரை 1.6 கோடி மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 5 லட்சத்தினை கடந்துள்ளது.

Advertisement

உலக வல்லரசான அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 27 லட்சத்தினை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரம் பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

Advertisement