This Article is From Aug 07, 2020

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனாவால் 62,000 பேர் பாதிப்பு!

இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனாவால் 62,000 பேர் பாதிப்பு!

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனாவால் 62,000 பேர் பாதிப்பு!

New Delhi:

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 62,538 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை அடைந்த 21 நாட்களில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில், 886 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 41,585 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை நோய் தொற்றால் பாதிப்படைந்த 13.78 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைபவர்களின் விகிதமானது 67.98 ஆக உள்ளது. 

ஜனவரி 30ம் தேதி கேரளாவில் முதல் பாதிப்பு பதிவானதில் இருந்து 190 நாட்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 20 லட்சத்தை கடந்துள்ளது. மே.19ம் தேதியில் நாட்டில் ஒரு லட்சம் பேர் பாதிப்படைந்த நிலையில், ஜூன் மாதத்தில், ஐந்து லட்சத்தை தாண்டியது.

ஜூலை மாதத்தில், இந்தியா அதன் பாதிக்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்தது. மாத தொடக்கத்தில் கொரோனா எண்ணிக்கை சுமார் ஆறு லட்சமாக இருந்தாலும், ஜூலை 31க்குள் இது 16 லட்சமாக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளை பதிவு செய்த மாநிலங்களின் வரிசையில் மகாராஷ்டிரா (11,514), ஆந்திரா (10,328), கர்நாடகா (6,805), தமிழகம் (5,684) மற்றும் உத்தரப்பிரதேசம் (4,586) உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. 

தொடர்ந்து ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளை சந்தித்த மாநிலங்கள் வரிசையில் மகாராஷ்டிராவில் 316 பேர், தமிழகத்தில் 110 பேர், கர்நாடகாவில் 93 பேர், ஆந்திராவில் 72 பேர், உத்தரபிரதேசத்தில் 61 பேர் உயிரிழந்துள்ளனர். 

4.79 லட்சம் பாதப்பு எண்ணிக்கையுடன், மகாராஷ்டிரா இதுவரை அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பை பதிவு செய்துள்ளது. இதுவரை அங்கு 16,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் சுமார் 5.74 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 2.27 கோடியாக இருந்தது. 

.