This Article is From Aug 14, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24 லட்சத்தை கடந்தது; 48,049 பேர் உயிரிழப்பு!

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் படி, ஆக.4ம் தேதி முதல் 13ம் தேதி வரை உலகளவில் நாட்டில் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24 லட்சத்தை கடந்தது; 48,049 பேர் உயிரிழப்பு!
New Delhi:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 64,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதானல், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 24,61,190 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 10 நாட்களாக உலகளவில் இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் பதிவாகி வருகிறது.

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் படி, ஆக.4ம் தேதி முதல் 13ம் தேதி வரை உலகளவில் நாட்டில் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தொடர்ந்து, குணமடைபவர்களின் விகிதமனாது 70.17 சதவீதமாக உள்ளது. இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 17,51,555 பேர் குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் குறிப்பாக மும்பையில் இந்தியாவில் கொரோனா கவலை அளிக்கிறது. புதிதாக 11,813 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மாநிலத்தில் கொரோனா வைரஸ் எண்ணிக்கையை 5,60,126 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் நேற்று புதிதாக 5,835 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதானல் பாதிப்பு எண்ணிக்கை 3,20,355 ஆக உயர்ந்துள்ளது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கையும் 5,397 ஆகவும் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தமிழகத்தில் தினமும் 400க்கும் மேற்பட்ட பாதப்பு எண்ணிக்கையுடன் புதிய கொரோனா மையமாக உருவாகி வருகிறது. 

நேற்று ஒரே நாளில் கர்நாடகாவில் 6,706 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,03,200ஆக உயர்ந்துள்ளது. 

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,996 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,64,142ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.95 சதவீம் குறைந்துள்ளது. 6.60 லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த எண்ணிக்கையில் 26.88 சதவீதமாகும். 

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் 7.55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2.09 கோடிக்கும் அதிகமான மக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

.