இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனாவால் 77,000 பேர் பாதிப்பு!
New Delhi: நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 77,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 33,87,500 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கூடுதலாக ஒரே நாளில் 1,057 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கையும் 61,529 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
நாட்டில் இதுவரை 25,83,948 பேர் நோய்தொற்றால் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் விகிதமானது 76.27 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து, மகராஷ்டிரா அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாக உள்ளது. அங்கு இதுவரை 7,33,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொரோனா வைரஸ் நோய்தொற்று காரணமாக 8.31 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 2.44 கோடி பேர் வரை உயிரிழந்துள்ளனர்.