Read in English
This Article is From Jul 22, 2020

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: சோதனைகள் முடிந்து இந்தியாவில் எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

இந்த சோதிக்கப்படாத தடுப்பு மருந்துகளுக்காக 200 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா ,
New Delhi:

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி இந்தியாவில் வரும் நவம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என்றும், அதன் விலை ரூ.1000 ஆக இருக்கும் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்களுடன் கூட்டு சேர்ந்துள்ள இந்திய பங்குதாரர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசியின் முதல் கட்ட சோதனை முடிவுகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், மருத்துவ பரிசோதனைகளுக்கு இணையாக அதன் உற்பத்தியும் தொடங்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதர் பூனாவாலா என்டிடிவியிடம் கூறும்போது, இந்த சோதிக்கப்படாத தடுப்பு மருந்துகளுக்காக 200 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள கட்டங்களில் மருத்துவ பரிசோதனைகள் தோல்வியடைந்தால், ஒதுக்கப்பட்ட முழு பங்குகளும் அழிவுக்குள்ளாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி சோதனை முடிவுகள் குறித்து இந்த வாரம் தி லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது. அதில், முதல் கட்ட மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அந்த தடுப்பு மருந்துகள் எந்தவொரு கடுமையான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்றும், ஆன்டிபாடி மற்றும் டி-செல் நோயெதிர்ப்பு சக்திகளை தூண்டியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இதுகுறித்து உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் கூறும்போது, இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று அவர் கூறியுள்ளார். 

தொடர்ந்து, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதர் பூனாவாலா கூறும்போது, இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் மூன்றாவது கட்ட சோதனை செல்வோம் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். அந்த சோதனை முடிவடைய இரண்டிலிருந்து, இரண்டரை மாதங்கள் ஆகும் என்று நாங்கள் கணித்துள்ளோம். அதன்படி, சோதனைகள் அனைத்தும் சாதகமாக இருந்து, இந்திய மருத்துக் கட்டுப்பாட்டாளர்கள் அதனை பாதுகாப்பானது என்று கூறும்பட்சத்தில் வரும் நவம்பரில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இந்திய மக்கள்தொகையுடன், சீரம் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பு மருந்துகள் பாதி அளவு ஏற்றுமதி செய்யப்படும் - அதாவது ஒவ்வொரு மாதமும் தயாரிக்கப்படும் சுமார் 60 மில்லியன் தொகுப்புகளில், இந்தியாவுக்கு 30 மில்லியன் கிடைக்கும்.

Advertisement

நமது நாட்டை காப்பது என்பது தேசபக்த கடமையாக கருதப்படுகிறது. இறுதியில் அது நாட்டின் சிறந்த நலன்களுக்காக செயல்படாது என்று அவர் தெரிவித்துள்ளார். 

இந்த உலகமயமாக்கல் சகாப்தத்தில்,'உலகம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு பாதிக்கப்படக்கூடிய மக்கள் பாதுகாக்கப்படாவிட்டால், அனைத்து இடங்களிலும் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நடவடிக்கைகளை மீண்டும் இயங்க அனுமதிக்காது என்று சுகாதார வல்லுநர்களும், பொருளாதார வல்லுநர்களும் தெளிவுப்படுத்தியுள்ளனர். அப்படியென்றால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை சார்ந்திருக்கும் இந்தியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். இதனால், நாட்டின் தலைவர்கள் நிலைமையை புரிந்துக்கொள்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement