বাংলায় পড়ুন Read in English
This Article is From May 03, 2020

கொரோனா போர் வீரர்களுக்கு ராணுவத்தின் மிகப்பெரிய நன்றி! முக்கிய தகவல்கள்!!

இந்திய ராணுவத்தின் போர் மற்றும் சரக்கு விமானங்கள் வடக்கு காஷ்மீர் தொடங்கி தெற்கே கன்னியாகுமரி வரையும், கிழக்கே அசாமின் திப்ருகாரில் தொடங்கி மேற்கே குஜராத்தின் கட்ச் வரை பறந்து செல்லும். இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்கள் விளக்குகளை ஒளிரவிடும். அவற்றின் ஹெலிகாப்டர்கள் மருத்துவமனைகளின் மீது மலர்களை தூவிச் செல்லும்

Advertisement
இந்தியா
New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் 39ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றுக்கு எதிரான போரில் களத்தில் நிற்கும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் போர் மற்றும் சரக்கு விமானங்கள் வடக்கு காஷ்மீர் தொடங்கி தெற்கே கன்னியாகுமரி வரையும், கிழக்கே அசாமின் திப்ருகாரில் தொடங்கி மேற்கே குஜராத்தின் கட்ச் வரை பறந்து செல்லும். இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்கள் விளக்குகளை ஒளிரவிடும். அவற்றின் ஹெலிகாப்டர்கள் மருத்துவமனைகளின் மீது மலர்களை தூவிச் செல்லும் என நேற்று மாலை இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், முப்படைகளின் தளபதிகளுடன் அறிவித்திருந்தார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, கொரொனா தொற்றுக்கு எதிராகப் போராடக்கூடிய மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்க மக்கள் தங்கள் வீட்டு மேல்மாடத்திலிருந்து கைகளைத் தட்டுமாறும், விளக்குகளை அணைக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடக்கூடியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மூன்றாவது வழிமுறையை பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

  • நாடு முழுவதும் அமலாக்கப்பட்ட முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கையை உறுதி செய்ய களத்தில் பணியாற்றும் காவல்துறையினரைக் கவுரவிக்கும் விதமாக இன்று காலை தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள காவல்துறையினரின் நினைவிடத்திலும், மற்ற நகரங்களிலும் மலர் தூவி நன்றி உணர்வினை வெளிப்படுத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • மேற்கு விமான தலைமையைச் சேர்ந்த இந்திய விமானப்படையின் (IAF) போர் விமானங்கள், காலை 10:30 மணி முதல் டெல்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனை, ராஜீவ் காந்தி சிறப்பு மருத்துவமனை மற்றும் தீன் தயால் உபாத்யாய் மருத்துவமனை என நகர் முழுவதும் மருத்துவமனைகளில் மலர் இதழ்களை தூவி நன்றியுணர்வினை வெளிப்படுத்தும்.
  • சுகோய் -30 எம்.கே.ஐ, மிக் -29 மற்றும் ஜாகுவார் ஆகிய போர் விமானங்கள், மத்திய டெல்லியின் ராஜ்பாத் மீது பறக்கும். மேலும், காலை 10 மணி முதல் 30 நிமிடங்களுக்கு நகரத்தினை சுற்றிவரும் என பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • மும்பையில், கிங் எட்வர்ட் மெமோரியல் (KEM) மருத்துவமனை மற்றும் கஸ்தூர்பா காந்தி மருத்துவமனை ஆகியவற்றின் மீது ராணுவ விமானங்கள் மலர் இதழ்களைத் தூவும்.
  • நம்முடைய ஆயுதப்படையினர் தேசத்தினை எப்போதும் பாதுகாப்பா வைத்துள்ளனர். பேரிடர் காலகட்டங்களில் மக்களுக்கு அவர்கள் உதவுகிறார்கள். இப்போது நம்முடைய படையினர் தனித்துவமான வகையில், இந்தியாவை கொரோனா இல்லாத நாடாக மாற்ற கொரோனா தொற்றுக்கு எதிராக களப்பணியில் உள்ள கொரோனா போர் வீரர்களுக்கு தங்களுடைய நன்றியினை தெரிவிக்கின்றனர். என பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ட்விட் செய்துள்ளார்.
  • இந்திய விமானப்படையின் C-130 சரக்கு விமானம் டெல்லி மற்றும், தேசிய தலைநகர் பிராந்தியத்தின்(National Capital Region) பகுதிகளில் ஏறக்குறைய 500 மீட்டர் முதல் 1,000 மீட்டர் உயரத்தில் விண்வெளி பாதுகாப்பைக் கணக்கில் கொண்டும், பறவைகளின் வழித்தடத்தினை கணக்கில் கொண்டும் பறக்கும். என இந்திய விமானப்படை அதிகாரி ஒருவரின் பேட்டியை பி.டி.ஐ செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.
  • தற்போது அமலில் இருக்கும் முழு முடக்க நடவடிக்கையின் காரணமாகத் தொழிற்சாலைகள் செயல்படாததால் காற்றின் மாசு குறைந்துள்ளது. இந்நிலையில் விமானப்படை தூவும் மலர்களை வானத்தில் பிரகாசமாகக் காணமுடியும்.
  • கப்பற்படையைப் பொறுத்த அளவில், மும்பையின் கேட்வே ஆப் இந்தியாவிலிருந்து இரவு 7.30 மணி முதல் இரவு 11:59 மணி வரை மேற்கு கடற்படை தலைமையின் ஐந்து கப்பல்கள் ஒளியை ஒளிரச் செய்யும். மேலும், "இந்தியா சல்யூட்ஸ் கொரோனா வாரியர்ஸ்" என்கிற பதாகைகளை கடற்படை வீரர்கள் ஏந்தியிருப்பார்கள். கப்பல்களின் சைரன் மற்றும், ஒளியை ஏற்படுத்தி தங்கள் நன்றியுணர்வினை வெளிப்படுத்துவார்கள் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • இதேபோல கோவாவில், கடற்படை விமான தளத்தின் ஓடுபாதையில், கொரோனா வீரர்களை கவுரவிப்பதற்காக மனிதச் சங்கிலியை உருவாக்குகிறது கடற்படை. மேலும், கிழக்கு கடற்படை தலைமை இரவு 7.30 மணி முதல் நள்ளிரவு வரை விசாகப்பட்டினத்தில் இரண்டு கப்பலை நிறுத்தி அதில் ஒளியை ஒளிரச் செய்து தங்கள் நன்றியுணர்வினை வெளிப்படுத்தும்.
  • தேசிய அளவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, 39,980 ஆக அதிகரித்துள்ளது. இதில், 10,633 பேர் குணமடைந்துள்ள நிலையில், 28,046 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 1,301 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement